பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, August 16, 2010

ஆண்களை சிறைக்கு அனுப்பும் இந்தியத் திருமணங்கள்

இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குச் சென்ற காரணத்தால் இந்திய சட்ட தீவிரவாதத்தால் பாதிக்கப்டும் அப்பாவிகளைக் காப்பாற்றவேண்டும் என்று அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து ஏற்காட்டில் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.

குடும்ப பிரச்னையில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவதா?
ஆகஸ்ட் 15,2010 தினமலர்

சேலம் : "குடும்ப பிரச்னையில் பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதைத் தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்,'' என ஏற்காட்டில் நடந்த ஆண்கள் நல உரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க சார்பு அமைப்புகள் சார்பில், ஏற்காட்டில் மூன்றாவது ஆண்கள் நல உரிமை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண்/பெண் என்று வருகிறதோ அவற்றை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன்/மனைவி என வருகிறதோ அவற்றை துணை என்றும் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது மாநகர மற்றும் நகர அளவில் 60 இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளை கிராம அளவிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால், அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க வேண்டும். குடும்ப பிரச்னையில் பெண்களுக்கு வேண்டிய ஒரு தீர்வுக்கு, பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதை தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்.தற்போது ஐந்து ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்படும் குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றம் அமைத்து இரண்டு ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் ஆண்கள் நலம், பிரச்னைகள் மற்றும் உரிமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 15 (3) பாதுகாப்பில் பெண்களை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் வகையில் சட்டங்கள் இயற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் பஞ்சாப், அரியானா, அசாம், சத்திஸ்கர், மேற்கு வங்கம், புதுடில்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 ஆண்கள் நல தன்னார்வ அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் ஆதரவு சட்டத்தில் ஏழு லட்சம் பேர் கைது : "குடும்ப வன்முறை சட்டம், பெண்கள் ஆதரவு சட்டத்தின் கீழ், நான்கு ஆண்டில் 500 குழந்தைகள் உட்பட ஏழு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என, அகில இந்திய ஆண்கள் நலச் சங்க தேசிய உறுப்பினர் சுரேஷ் தெரிவித்தார்.இது குறித்து அவர் நேற்று சேலத்தில் கூறியதாவது:மனைவியை தற்கொலைக்கு தூண்டும் வகையிலும், மனரீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் செயல்படும் கணவன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இந்திய தண்டனை சட்டம் 498(ஏ) படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டங்கள் போலீசாரும், வக்கீல்களும் பணம் பறிக்கும் சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கணவனுக்கு மனைவியால் இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து ஆண்களை காப்பாற்றிக் கொள்ள எந்த வகையிலும் சட்டங்கள் இல்லை. பெண்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தாமலே ஆண்களும், அவர்களின் குடும்பத்தாரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தால் அதிக அளவில் கவுரவமான பொறுப்பில் இருக்கும் டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாப்ட்வேர் துறையில் பணி செய்யக்கூடியவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். விவாகரத்து சட்டங்கள், குடும்ப வன்முறை சட்டங்கள் இந்திய குடும்ப அமைப்பை தகர்க்கும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களின் மூலம் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 7 லட்சம் ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 500 குழந்தைகளும், 5,000 முதியவர்களும் அடங்குவர். பெண்கள் 1.6 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று நேர்மையாக அகிம்சை வழியில் அநீதியிலிருந்து காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தால் அப்பாவிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்ப்பதில்லை. ஆனால் நக்சல்களும் , மாவோக்களும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களிடம் எல்லாத் தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இப்போது வன்முறைக்குத்தான் மரியாதை தருவார்களோ?

தினமலர் ஆகஸ்ட் 16, 2010
புதுடில்லி : "நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். மன்மோகன் கோரிக்கை.

இளைஞர்களே,

அரசாங்கம் எப்போது விழித்துக்கொண்டு உங்களைக் காப்பாற்றும் என்று தெரியவில்லை. அதனால் நீங்கள் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.No comments: