பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, August 18, 2010

ஏற்காட்டில் வெடித்த எரிமலை

சமீபத்தில் ஏற்காட்டில் இந்திய ஆண்கள் நலச் சங்கம் சார்பாக அகில இந்திய மாநாடு நடந்தது. இந்தியாவில் உள்ள எல்லா செய்தித்தாள்களிலும் அதைப்பற்றிய செய்திகள் வந்திருந்தது. அவற்றின் தொகுப்பு கீழே உள்ளது.


திருமணம் செய்வதற்குத் தயாராகும் இந்திய இளைஞர்கள் இந்த செய்தித் தொகுப்பிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் இந்தியாவில் திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கை இருண்டுவிடும் என்பதுதான். அதுவும் சட்டப்பூர்வமாக இந்திய அரசின் தவறான வரதட்சணை சட்டங்களால்தான் உங்கள் வாழ்க்கை நாசமாக்கப்படும். இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் பொய்வரதட்சணை வழக்கில் சிக்கி காவல்நிலையத்தில்தான் நீங்கள் தேனிலவிற்கு செல்லவேண்டியிருக்கும். அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக ஏற்காட்டில் தேனிலவு கொண்டாடுங்கள்!



பத்திரிக்கையாளர்களுடன் இந்திய ஆண்கள் நலச் சங்க தேசியத் தலைவர்களின் சந்திப்பு



ஏற்காட்டு மாநாட்டில் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் குமுறல்
தமிழ் குறிஞ்சி Monday, 16th August 2010

ஏற்காட்டில் நடந்த மாநாட்டில், மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் தங்களின் மனக்குமுறல்களை கூறி, சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒருங்கிணைந்து `இந்திய குடும்ப பாதுகாப்பு` என்ற அமைப்பை கடந்த 2005-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள்.

இந்த அமைப்பின் 3-வது மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, அசாம், சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், புதுடெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவர்கள், மனைவிகளால் தாங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டோம் என்ற மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை சில பெண்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள் என வேதனையுடன் குறிப்பிட்டார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* அரசின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண் மற்றும் பெண் என்று வருகிறதோ அதை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன் மற்றும் மனைவி என்று வருகிறதோ அதை துணை என்றும் மாற்ற வேண்டும்.

* ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால் அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்பது.

* குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்.

* ஆண்கள் நலம், பிரச்சினைகள், உரிமைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

* குழந்தை வளர்ப்பில் ஆண், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு பிறகு அகில இந்திய ஆண்கள் நல சங்கத்தின் தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களின் அமைப்பு குடும்ப அமைப்பை காப்பாற்றவும், ஆண்கள் நலனை பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஏற்காட்டில் நடந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆண்கள் நலனில் அக்கறை கொண்ட 22 அமைப்புகள் பங்கேற்றன. எங்களின் அமைப்பில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களும், சாப்ட்வேர் என்ஜினீயர்களும் அதிகமாக உள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவை பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் மன ரீதியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள். அதே போல குடும்ப வன்முறை சட்டத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண விழாவில் தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதே வேளையில் மாப்பிள்ளை சென்று விட்டால் அவர் கைது செய்யப்படுகிறார்.

அதே போல குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தை தாயிடம் வளர சட்டமும், தந்தை ஒரு மணி நேரமே பார்க்க அனுமதியும் வழங்கப்படுகிறது. சம உரிமை என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அனைத்து விஷயங்களிலும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஆண்டில் ஆண்களில் 60 ஆயிரம் பேரும், பெண்களில் 32 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே ஆண்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வரும்.

இவ்வாறு சுரேஷ்ராம் கூறினார்.

=================


தட்ஸ் தமிழ் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 16, 2010

ஏற்காடு: மனைவி உள்ளிட்ட பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் நலனுக்கென தனி துறையை உருவாக்கி அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று ஆண்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒருங்கிணைந்து இந்திய குடும்ப பாதுகாப்பு என்ற அமைப்பை கடந்த 2005-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள்.

இந்த அமைப்பின் 3-வது மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு , பஞ்சாப், அரியானா, அசாம், சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவர்கள், மனைவிகளால் தாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம், சிரமத்திற்குள்ளானோம் என்பதை குமுறலுடன் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

- அரசின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண் மற்றும் பெண் என்று வருகிறதோ அதை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன் மற்றும் மனைவி என்று வருகிறதோ அதை துணை என்றும் மாற்ற வேண்டும்.

- ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால் அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்பது.

- குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்.

- ஆண்கள் நலம், பிரச்சினைகள், உரிமைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

- குழந்தை வளர்ப்பில் ஆண், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

பின்னர் அகில இந்திய ஆண்கள் நல சங்கத்தின் தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்களின் அமைப்பு குடும்ப அமைப்பை காப்பாற்றவும், ஆண்கள் நலனை பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஏற்காட்டில் நடந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆண்கள் நலனில் அக்கறை கொண்ட 22 அமைப்புகள் பங்கேற்றன. எங்களின் அமைப்பில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களும், சாப்ட்வேர் என்ஜினீயர்களும் அதிகமாக உள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவை பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் மன ரீதியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள்.

அதே போல குடும்ப வன்முறை சட்டத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண விழாவில் தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதே வேளையில் மாப்பிள்ளை சென்று விட்டால் அவர் கைது செய்யப்படுகிறார்.

அதே போல குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தை தாயிடம் வளர சட்டமும், தந்தை ஒரு மணி நேரமே பார்க்க அனுமதியும் வழங்கப்படுகிறது. சம உரிமை என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அனைத்து விஷயங்களிலும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஆண்டில் ஆண்களில் 60 ஆயிரம் பேரும், பெண்களில் 32 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே ஆண்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வரும் என்றார்.

=================


சேலம், ஆக. 16-2010 தமிழ் கூடல்

ஏற்காட்டில் நடந்த மாநாட்டில், மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் தங்களின் மனக்குமுறல்களை கூறி, சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒருங்கிணைந்து "இந்திய குடும்ப பாதுகாப்பு" என்ற அமைப்பை கடந்த 2005-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பின் 3-வது மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, அசாம், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம், புதுடெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவர்கள், மனைவிகளால் தாங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டோம் என்ற மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை சில பெண்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள் என வேதனையுடன் குறிப்பிட்டார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* அரசின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண் மற்றும் பெண் என்று வருகிறதோ அதை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன் மற்றும் மனைவி என்று வருகிறதோ அதை துணை என்றும் மாற்ற வேண்டும்.

* ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால் அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்பது.

* குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்.

* ஆண்கள் நலம், பிரச்சினைகள், உரிமைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

* குழந்தை வளர்ப்பில் ஆண், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு பிறகு அகில இந்திய ஆண்கள் நல சங்கத்தின் தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களின் அமைப்பு குடும்ப அமைப்பை காப்பாற்றவும், ஆண்கள் நலனை பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஏற்காட்டில் நடந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆண்கள் நலனில் அக்கறை கொண்ட 22 அமைப்புகள் பங்கேற்றன. எங்களின் அமைப்பில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களும், சாப்ட்வேர் என்ஜினீயர்களும் அதிகமாக உள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவை பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் மன ரீதியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள். அதே போல குடும்ப வன்முறை சட்டத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண விழாவில் தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதே வேளையில் மாப்பிள்ளை சென்று விட்டால் அவர் கைது செய்யப்படுகிறார். அதே போல குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தை தாயிடம் வளர சட்டமும், தந்தை ஒரு மணி நேரமே பார்க்க அனுமதியும் வழங்கப்படுகிறது. சம உரிமை என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அனைத்து விசயங்களிலும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஆண்டில் ஆண்களில் 60 ஆயிரம் பேரும், பெண்களில் 32 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே ஆண்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வரும். இவ்வாறு சுரேஷ்ராம் கூறினார்.

=================

சேலம் : இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க சார்பு அமைப்புகளின் 3வது அகில இந்திய ஆண்கள் நல உரிமை மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய ஆண்கள் நலசங்க தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 1984ம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை சட்டம் முற்றிலும் ஆண்களுக்கு எதிராக உள்ளது.

ஆண்களுக்கு எதிரான சட்டங்கள், ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சமுதாய புறக்கணிப்பு, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்டவற்றை எதிர்த்து, ஆண்களுக்காக கடந்த 2005ல் ‘இந்திய குடும்ப பாதுகாப்பு’ என்ற அமைப்பை உருவாக்கினோம். இதில், நாடு முழுவதும் 4,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் 3 மாநாடுகளை நடத்தியுள்ளோம்.

நம்நாட்டில் பெண்களை பாதுகாக்க 82 சட்டங்கள் உள்ளன. ஆனால், ஆண்களை பாதுகாக்க தனியாக சட்டம் இல்லை. ஒரு ஆணை, பெண் பாலியல் தொந்தரவு செய்தால் அந்த பெண்ணை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே, ஆண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம் மற்றும் ஆண்கள் நல வாரியம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு சுரேஷ்ராம் கூறினார்.

=================

SALEM: A national-level coordination forum of men has called for protection from wives and live-in partners whom they charged with exploiting women's welfare legislation that arm them with ‘unbridled' power to act against men.

The men, who claim to be ‘victims' of such legislation from all over the country, spent three days in a resort at the hill station of Yercaud near here to deliberate on how to protect themselves and their kith and kin from harassment and to kick-start a campaign to impress upon policy-makers to think about their plight before enacting such lop-sided laws.

The forum said that many women were abusing these laws for nefarious gains by filing charges against their husbands and partners.

The provisions in these statutes, they called, were ‘anti-men' leading to suicide of nearly 60,000 men as against 32,000 women annually.

Between 2004 and 2008, seven lakh men and family members were arrested including 500 minors and 5000 aged people, they claimed.

They pointed out that, for instance, laws such as the Dowry Prohibition Act, Protection of Women from Domestic Violence Act, Sec 125 of Cr. PC and above all Section 498A of Indian Penal Code were too stringent and non-bailable.

Women's lobbies

“Though a debate is going on in legal circles on whether to amend or not especially Sec 498A to prevent its abuse, a few powerful women's lobbies are blocking it,” said Suresh Ram, National Collegium member, All India Men's Welfare Association, which organised the 3 {+r} {+d} Men's Rights Conference of the Delhi-based Save Indian Family Foundation at Yercaud in Salem district.

Delegates from Maharashtra, Assam, West Bengal, Uttar Pradesh, Karnataka, Andhra Pradesh, Chattisgarh, Madhya Pradesh and from the U.S. attended the deliberations.

A majority of them were from Karnataka, mainly young Information Technology professionals. They said that they would urge the government to replace the words ‘Husband and Wife' with ‘Person' in the said acts. They said that cases before Family Courts should be expedited and settled within two years.

The government would be approached to form National Commission for Men, they add.

=================


Monday, 16 August 2010 YERKAUD(Tamil Nadu):

As many as 22 national NGOs participated in the 3rd Men’s Rights Conference held at Yercaud in Tamil Nadu on the 14th and the 15th of August, 2010.

The organizations marked a “sugarless” Independence Day this year as a symbol of the bitter life they have been handed out by women who harass them and even deny them parenting rights.
“SIFF and its allied NGOs, under the aegis of the Save Indian Family movement, called for a “Sugarless Independence Day”, this year. Men’s rights activists who attended the conference decided to have sugarless tea/coffee on the 15th of August, 2010 and also did not had any other sweets. This was an epitome of the bitterness in the lives of men who are living in a society where there are only expectations from them and no acceptance for them”, said Mandeep Puri, coordinator of the Chandigarh Chapter.

“This men’s rights conference was conducted to discuss and intensify the awareness campaign of the various problems being faced by men in India as sons, brothers, husbands and fathers including skyrocketing suicide rates by men, especially married men. As per National Crime Records Bureau (NCRB)”, said Gaurav Saini, coordinator, Chandigarh Chapter.

“The organization plans to intensify the movement and aim to establish a Men’s Welfare Ministry. Further, the movement plans to expand to another 50 cities with Help line and create Massive Awareness Campaign among the people to reject in political arena (MLA, MP) who neglect ‘men welfare/interest’ by creating a SIF vote bank”, said Arun Kumar.

“Intensify the need of ‘Men’s Welfare Ministry’ through awareness and advocacy with executives and stop Multiple Maintenance litigation were some other demanded which were discussed during the national conference at Yerkaurt”, added Mandeep Puri

“The Chandigarh chapter will soon be announcing the launch of the Chandigarh Chapter of All India Mother-in-Law Protection Forum and Child Rights in Shared Parenting”, said the organization.


The NGOs which were a part of the conference were:
  1. Save Family Foundation, New Delhi
  2. Gender Human Rights Society, New Delhi
  3. Save Indian Family, Nagpur, Maharastra
  4. Hridya, Kolkata, West Bengal
  5. Save Indian Family, Guwahati, Assam
  6. Pati Pariwar Kalyan Samathi, Lucknow, Uttar Pradesh
  7. All India Mother-in-Law Protection Forum, Bangalore, Karnataka
  8. Save Indian Family,Chandigarh
  9. Save Indian Family, Bangalore , Karnataka
  10. Save Indian Family Movement, Chennai, Tamil Nadu
  11. Save Family Harmony, Visakapatinam, A.P
  12. Save Indian Family, Hyderabad, Andhra Pradesh
  13. National Litigant Bench, Bangalore, Karnataka
  14. AIMWA ( All India Men’s Welfare Association), Hyderabad, Andra Pradesh
  15. National Family Harmony Society, Bangalore, Karnataka
  16. Save Indian Family, Pune, Maharastra
  17. Save Indian Family, Jabalpur, Madhra Pradesh
  18. PURE ( People’s Urge for Rights & Equity), Mysore, Karantaka
  19. Child Rights in Shared Parenting, Bangalore, Karnataka
  20. SAMSEVA, Bangalore, Karnataka
  21. Men’s Seek Justice, USA/Delhi and
  22. Save Indian Family, Raipur, Chastigarh

======================

ஏற்காட்டில் கொந்தளித்த கணவர்கள்...!
ஜூனியர் விகடன் கட்டுரை

முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.'' - இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு 'வாழ்க்கை இழந்தவர்கள்'! இவர்கள் 'அகில இந்திய ஆண்கள் நல சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்!

''எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால்

2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சம்ஹார் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு ரிலாக்ஸ் தேடவோ.... ஹனிமூன் ஜோடிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றோ... சுற்றுலாத் தலங்களாகப் பார்த்து மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். முதல் மாநாட்டை சிம்லாவிலும், இரண்டாம் மாநாட்டை கோவாவிலும் நடத்தி முடித்தவர்கள், இம்முறை அந்த மாநாடு ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில்!

மாநாட்டில் சோகமே உருவாக இருந்த கேரளாவின் கோகுலிடம் பேசினோம். ''எனக்கு சொந்த ஊர் திருச்சூர். வசதியான குடும்பத்தில் நான் ஒரே பையன். எனக்கும் ஆலப்புழாவைச் சேர்ந்த கிருஷ்ணகலாவுக்கும் 2001-ம் வருஷம் கல்யாணம் நடந்துச்சு. நாங்க மும்பையில் குடும்பம் நடத்தினோம். கல்யாணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் சின்னச்சின்னப் பிரச்னைகள் முளைச்சது.

அடிக்கடி அவங்க வீட்டு பெருமையைப் பேசுற மாதிரி என்னைக் குத்திக்காட்டுவா. நான் யார்கிட்ட பேசினாலும் அவளுக்கு சந்தேகம்தான். அடிக்கடி ஆபீஸுக்கே வந்து என்னைப்பத்தி விசாரிச்சு அசிங்கப்படுத்தினா. வீட்டுக்கு வந்த உடனே என் மொபைல் போனைப் பிடுங்கி சோதனை செய்றது வழக்கமாப்போச்சு.

ஒருநாள், 'நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்'னு கேரளாவுக்குப் போயிட்டா. 10 நாளுக்கு மேலாகியும் வரலை. நான் போன் செய்து கூப்பிட்டா, 'எங்க வீட்டுல உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொல் றாங்க. இஷ்டம் இருந்தா வாங்க...'ன்னு சொல்லிட்டா. நான் வரலைன்னு சொன்னதும், எங்க குடும்பத்துல இருக்குற அத்தனை பேர் மேலயும் வரதட்சணை வழக்கு போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கும் அலையவிட்டாள். சமீபத்தில்தான், இந்த அமைப்புபத்தி கேள்விப்பட்டு அதில் சேர்ந்தேன். இவங்க சட்டரீதியாக எனக்குத் துணையா இருக்காங்க...'' என்றார்.

சுரேஷ் ராம் என்பவர், ''நான் சென்னையில் வியாபாரம் பண்றேன். என் மனைவியின் குடும்பத்தினர் பொய்யாக என் மேல் வரதட்சணை வழக்கு போட்டு அலையவெச்சாங்க. நானும் இந்த அமைப்பில் சேர்ந்தேன். இவங்கதான், 'என் மேல் தவறு எதுவும் இல்லை. நான் வரதட்சணை கேட்கவும் இல்லை'ன்னு சட்டரீதியாக நிரூபிச்சாங்க. இந்த அமைப்பு மட்டும் இல்லைன்னா, நான் ஜெயிலுக்குப் போய் இருப்பேன்.'' என்றவர் தொடர்ந்து,

''நம் நாட்டில் ஆண்களுக்கு எதிராக பல சட்டங்கள் இருக்கின்றன. அதுவும் ஒரு பெண், கணவனால் தனது மனநலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று புகார் தெரிவித்தாலே, கணவனையும் அவரது உறவினர்களையும் விசாரணை இன்றி மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஒரு பெண் திருமணமாகி ஏழு ஆண்டுக்குள் தற்கொலை செய்துகொண்டாலோ, வேறு வகையில் இறந்தாலோ, சந்தேகத்தின் பேரில் விசாரணை இன்றி, உடனடியாகக் கணவரையும் உறவினர்களையும் கைது செய்ய முடியும். ஆனால் அதேபோல, ஏழு வருடங்களுக்குள் கணவன் இறந்துவிட்டால், மனைவிக்கும் அவளது உறவினர்களுக்கும் எந்த விசாரணையோ தண்டனையோ கிடையாது. இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டங்களில் திருத்தங்கள் தேவை.'' என்றார் ஆதங்கத்துடன்.

இந்த அமைப்பின் தமிழக மாநிலத் தலைவர் பிரான்ஸிஸ், ''எனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். ஆனால், என் மீது வரதட்சணை வழக்குப் போட்டு 500 பவுன் நகையும், 75 லட்சம் பணமும் கேட்டு மிரட்டினார்கள். நானும் என் பெற்றோரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். உலகத்தில் அரபு நாடுகளில்கூட இங்கு இருப்பது போல் கணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இல்லை. இங்கு ஆண்களுக்கு எதிராக சுமார் 30 கிரிமினல் சட்டங்கள் இருக்கின்றன. ஆண்கள் சார்பாக ஒரு சட்டமும் இல்லாத நிலையில், பெண்கள் சார்பாக 84 சட்டங்கள் இருக்கின்றன. திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால், தண்டனை உண்டு. ஆனால், பெண் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் தண்டனை எதுவும் கிடையாது!

ஓர் இளைஞர் ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு ஏமாற்றினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஒரு பெண் வாலிபனைக் காதலித்துவிட்டுக் கை கழுவிவிட்டுச் சென்றால் நடவடிக்கை கிடையாது. இதுபோன்ற சட்டங்கள் இருப்பதால்தான் பெண்கள் துணிச்சலுடன் தவறு செய்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற சட்டங்களால் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 512 ஆண்கள் தண்டனை பெற்று இருக்கிறார்கள். நம் நாட்டின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீலின் சகோதரர் தொடங்கி, அர்ஜுன்சிங், செம்மலை, எஸ்.எஸ்.சந்திரன், பிரசாந்த் எனப் பிரபலமான குடும்பங்கள்கூட பெண்களால் இதுபோல் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்று ஒரு வி.ஐ.பி. பட்டியலைப் போட்டார்.

அகில இந்தியத் தேசியத் தலைவர் ஸோரூப் சம்ஹாரி, ''நான் டெல்லியில் வசிக்கிறேன். என் அனுமதி இல்லாமல் என் மனைவி கருக்கலைப்பு செய்தார். இதனால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டேன். அப்போதுதான் வலைத்தளம் மூலம் மனைவியால் பாதிக்கப் பட்டவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பை ஏற்படுத்தினேன். இதில் சேர சந்தா எதுவும் கிடையாது. இலவசம்தான். இப்போது 84 ஆயிரம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் சட்டம் சமமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசியக் குற்றப் புள்ளியியல் ஆய்வில் ஒரு வருடத்துக்கு மனைவியால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 32 ஆயிரம் பெண்கள் மட்டுமே ஆண்களால் பாதிக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப் படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. கால்நடைகளைப் பாதுகாக்கக்கூட இங்கு அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், ஆண்களைப் பாதுகாக்க அமைப்புகள் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட ஆண்கள் எங்களை www.498a.org, www.aimwa.in என்ற வலைத் தளத்தில் தொடர்புகொண்டால் கட்டாயம் உதவுவோம்!'' என்றார் நம்பிக்கையுடன்.

=======================


சேலம் : "குடும்ப பிரச்னையில் பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதைத் தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்,'' என ஏற்காட்டில் நடந்த ஆண்கள் நல உரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க சார்பு அமைப்புகள் சார்பில், ஏற்காட்டில் மூன்றாவது ஆண்கள் நல உரிமை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண்/பெண் என்று வருகிறதோ அவற்றை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன்/மனைவி என வருகிறதோ அவற்றை துணை என்றும் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது மாநகர மற்றும் நகர அளவில் 60 இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளை கிராம அளவிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால், அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க வேண்டும். குடும்ப பிரச்னையில் பெண்களுக்கு வேண்டிய ஒரு தீர்வுக்கு, பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதை தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்.தற்போது ஐந்து ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்படும் குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றம் அமைத்து இரண்டு ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் ஆண்கள் நலம், பிரச்னைகள் மற்றும் உரிமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 15 (3) பாதுகாப்பில் பெண்களை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் வகையில் சட்டங்கள் இயற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் பஞ்சாப், அரியானா, அசாம், சத்திஸ்கர், மேற்கு வங்கம், புதுடில்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 ஆண்கள் நல தன்னார்வ அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் ஆதரவு சட்டத்தில் ஏழு லட்சம் பேர் கைது : "குடும்ப வன்முறை சட்டம், பெண்கள் ஆதரவு சட்டத்தின் கீழ், நான்கு ஆண்டில் 500 குழந்தைகள் உட்பட ஏழு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என, அகில இந்திய ஆண்கள் நலச் சங்க தேசிய உறுப்பினர் சுரேஷ் தெரிவித்தார்.இது குறித்து அவர் நேற்று சேலத்தில் கூறியதாவது:மனைவியை தற்கொலைக்கு தூண்டும் வகையிலும், மனரீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் செயல்படும் கணவன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இந்திய தண்டனை சட்டம் 498(ஏ) படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டங்கள் போலீசாரும், வக்கீல்களும் பணம் பறிக்கும் சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கணவனுக்கு மனைவியால் இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து ஆண்களை காப்பாற்றிக் கொள்ள எந்த வகையிலும் சட்டங்கள் இல்லை. பெண்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தாமலே ஆண்களும், அவர்களின் குடும்பத்தாரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தால் அதிக அளவில் கவுரவமான பொறுப்பில் இருக்கும் டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாப்ட்வேர் துறையில் பணி செய்யக்கூடியவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். விவாகரத்து சட்டங்கள், குடும்ப வன்முறை சட்டங்கள் இந்திய குடும்ப அமைப்பை தகர்க்கும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களின் மூலம் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 7 லட்சம் ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 500 குழந்தைகளும், 5,000 முதியவர்களும் அடங்குவர். பெண்கள் 1.6 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

==================================================

இளைஞர்களே,

அகில இந்திய அளவில் எல்லாப் பத்திரிக்கைகளும் இந்தியத் திருமணத்தால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி உங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டன. இந்தியத் திருமண தகனமேடையிலிருந்து இனி உங்களைக் காப்பாற்றிக் கொள்வது உங்களது திறமை.




No comments: