இந்தியாவில் காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ கண்டிப்பாக உங்கள் பெயர் செய்தித்தாளில் ஒருநாள் வரும். நீங்கள் செய்வது காதல் திருமணமானாலும், குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமானாலும் பின்வரும் இரண்டு வழிகளில் உங்கள் பெயர் செய்தித்தாள், தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்கள் வழியாக பிரபலமாக்கப்படும்.
- மனைவியின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்தால் கொலைசெய்யப்பட்டு உங்கள் பெயர் செய்தித்தாளில் வெளியிடப்படும்.
- தனிக்குடித்தனம், பெற்றோரை விரட்டுதல் போன்ற மனைவியின் கட்டளைக்கு அடிபணியாமல் போனால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி குடும்பத்தோடு கைதுசெய்யப்பட்டு செய்தித்தாளில் வரும்.
கள்ளக் காதல் விவகாரத்தில் சங்கரன்கோவில் அருகே திமுக பிரமுகர் படுகொலை
செப்டம்பர் 28, 2010 TatsTamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் தி்முக செயலாளர் வைக்கோல் படப்பில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி முடிவணங்கான் கண்மாயில் உள்ள வைக்கோல் படப்பி்ல் கடந்த 2-ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலையானவர் யார் என்பது குறித்து உடனடியாக துப்பு துலங்கவில்லை. இதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சண்முகம் தலைமையில் கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்குமார் கொண்ட தனி்ப்படை அமைக்கப்பட்டது. 25 நாட்கள் கழித்து இந்த கொலையில் துப்பு துலங்கி உள்ளது.
வைக்கோல் படப்பில் பிணமாகக் கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த சாமுவேல் மகன் செல்லத்துரை என்பது தெரிய வந்தது. தையல் தொழிலாளியான இவர் அப்பகுதி திமுக கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.
செல்லத்துரை கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன் செல்லத்துரை அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரை காதலித்து திரு்மணம் செய்தார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தையல் தொழில் காரணமாக செல்லத்துரை திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று விடுவார். வீட்டில் அதிகம் தங்குவதில்லை.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரையின் நண்பர் அழகுதுரை என்பவருக்கும், மாரியம்மாளுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதை செல்லத்துரை கண்டித்தார். கள்ளக் காதலனையும் எச்சரித்தார். ஆனாலும் இவர்கள் தொடர்பு நீடித்தது.
ஒரு கட்டத்தில் கணவரின் கண்டிப்பு அதிகமானதால் அவரை தீர்த்து கட்ட மாரியம்மாள் முடிவு செய்தார். இதற்கு கள்ளக் காதலனும் சம்மதித்தார். செல்லத்துரைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அதை பயன்படுத்தி தீர்த்து கட்ட முடிவு செய்தனர். கடந்த 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு செல்லத்துரை வீட்டுக்கு வந்த அழகுதுரை அவருக்கு மது ஆசைகாட்டி வெளியே அழைத்து வந்தார்.
அவருடன் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் ஆறுமுகசாமி என்பவரும் சென்றார். நெல்லை மாவட்டம் முடிவணங்கான் கண்மாய்க்கு அழைத்து வந்து அவர்கள் மது அருந்தினர். போதையில் மிதந்த செல்லத்துரையை அவர்கள் இருவரும் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்றனர். அதன்பிறகு அங்கிருந்த வைக்கோல் படப்பில் செல்லத்துரை உடலை போட்டு தீ வைத்து எரித்தனர்.
சம்பவம் நடந்தது வேறு மாவட்டம் என்பதால் அவர்கள் இதுவரை பிடிபடாமல் இருந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டனர். இதை தொடர்ந்து செல்லத்துரை மனைவி மாரியம்மாள், கள்ளக் காதலன் அழகுதுரை, நண்பர் ஆறுமுகசாமி ஆகிய மூவரையும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==========
வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை கம்ப்யூட்டர் இன்ஜினியர் உட்பட 5 பேர் மீது வழக்கு
தினகரன் 9/26/2010
தினகரன் 9/26/2010
வாணியம்பாடி: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கம்ப்யூட்டர் இன்ஜினியர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரியா(25). உம்ராபாத் அடுத்த மோதலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீண்குமார். கம்யூட்டர் இன்ஜினியர்.இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். 2008ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்களாம். இதனை அவர்களது பெற்றோர்கள் ஏற்கவில்லையாம்.
இதையடுத்து 2009ம் ஆண்டு சமாதானம் ஏற்பட்டு உறவினர்கள் முன்னிலையில் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் பிரவீண்குமார் தனது மனைவி பெற்றோருடன் பெங்களூருக்கு சென்றார்.
அங்கு பிரவீண்குமார், அவரது தாயார் விஜயா, தந்தை சந்திரசேகரன் மற்றும் சித்தப்பா சாமுசவுத்ரி, சித்தி ரமணி ஆகியோர் வரதட்சணை கேட்டு பிரியாவை கொடுமைபடுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பிரியா நேற்று முன்தினம் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

2 comments:
ஆஹ ஒகோ!
இந்த வாரம் கள்ளக்காதல் கொலைகள் வாராம்.. கொஞ்ச நாள் நம்ம 498ஏ தங்க தமிழ்நாட்டுல இதுபோல் செய்திகள் ஒய்ந்திருந்தது... மறுபடியும் தொடங்கி வைத்த இந்த "குத்து" விளக்கிற்கு அணைத்திந்திய கள்ளக்காதல் சங்கக்தின் சார்பாக புழல் சிறை அருகே வரவேற்பு அளிக்கப்படும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக "அணைத்திந்திய 498ஏ சங்க நிர்வாகிகளின் சார்பாக" நன்றிஉரை ஆற்றப்படும்...
மற்றும் கூட்டத்தில் "498ஏ சங்கத்தின் சார்பாக" கொலை செய்யாமல் பொய்வழக்கு போட்டு ஆளைக்கொள்வது எப்படி என்றும் மற்றும் குடிஅளித்து எல்லோரையும் பிடித்து புழல் சிறையை சுற்றிப்பார்க அனுப்புவது எப்படி என்றும் சிறப்பு அலோசனை மற்றும் வகுப்புகள் எடுக்கப்படும்..
எல்லோரும் கலந்துகொன்று பயனடையுமாரு புதுசா கல்யாணமான மருமகள்களை கேட்டுக்கொள்கின்றோம்
புதிதாக திருமணம் ஆனா மாப்பிள்ளைக்கு(498ஏ பலிஆடுகளுக்கு) சில ஆலோசனைகள்...
1. திருமணத்திற்கு முன்பு வீட்டில் உள்ள மற்றும் பக்த்துவீடு நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் "முன் ஜாமின்" எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். தாங்கள் திருமண பத்திரிக்கை கொடுக்கும் பொழுது இதையும் இணைத்து கொடுத்தால் மிக்க நல்லது... அவர்கள் வீட்டில் பிரேம் செய்து மாட்டி வைத்துக்கொள்ளலாம்... ஏன் என்றால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே "மகளிர் காவல் நிலைய தெய்வங்கள்" வியாழன் இரவு அல்லது வெள்ளி அதிகாலை ஆகிய சுபமுகூர்த நேரங்களில்" தங்கள் வீட்டு கதவை தட்டி விசாரனைக்காக (???????) அழைத்துச்செல்வார்கள்... கொய்யால அங்க போன பிறகு தான் தெரியும் உங்களை புழல் சிறை துன்ப சுற்றுலாவிற்கு அழைத்து வந்திருக்கின்றார்கள் என்று...
2. தயவுசெய்து தேன்நிலவிற்கு மூனாறு செல்லாதிர்கள் அங்கயே உங்களை காவுகொடுக்க வாய்புள்ளது.
3. சிறுவயதில் வீட்டுக்குத்தெரியாமல் படித்த மஞ்சள் பத்திரிக்கைகளை அரசாங்க முத்திரையுடன் 498ஏ முதல் தகவல் அறிக்கை என்ற பெயரில் படிக்க நேரிடும்
மற்று ஆலோசனைகள் விளம்பர இடைவேளைக்கு பிறகு...
தொடரும்.....
Post a Comment