தற்காலத்து நவநாகரீக மங்கைகளின் திருமணக் கனவில் சிக்கும் இந்திய இளைஞர்களின் வாழ்வு கண்டிப்பாக நாசமாகிப் போய்விடும் என்பது உறுதி. இளைஞர்களின் வாழ்வையே அழிக்கும்அளவிற்கு இளமங்கையர் போடும் அந்தத் திட்டம் என்ன என்று தெரிந்துகொள்ள பின்வரும் வீடியோவைப் பாருங்கள்.
கைதேர்ந்த மருமகள்கள் தாங்களாகவே இந்த ஃபார்முலாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி தங்களது கணக்கை நன்றாக முடித்துக்கொள்கிறார்கள். வேறுசில மருமகள்கள் கணக்கிற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்வதுபோல வழக்கறிஞர்களை நாடினால் அந்த வழக்கறிஞர்கள் இந்தக் “கணக்கிற்கு” ஏற்ற ஃபார்முலாவாக இருக்கும் சட்டப்பிரிவை பரிந்துரை செய்து “கணக்கை” நன்றாக முடித்துத் தருகிறார்கள்.
இந்தியாவில் நடக்கும் திருமணம் மற்றும் அதற்குப் பிறகு வரும் பிரச்சனைகளை சற்று கூர்ந்துநோக்கினால் இந்தக் கணக்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று தெளிவாகப் புரியும். கணவனின் சொத்துக்களை எப்படி தன்வசப்படுத்துவது என்ற திட்டத்துடன் மணமுடிக்கும் பெண்கள் திருமணஉறவை ஒரு வியாபார ஒப்பந்தம் போல செயல்படுத்திக்கொண்டு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள். அது சரியாக செயல்படாமல் போகும்பட்சத்தில் தங்களது ஆயுதமான “வரதட்சணை தடுப்புச் சட்டங்களை” கையில் எடுப்பார்கள். கணவன் மற்றும் அவனது குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் “வரதட்சணைக் கொடுமை” செய்ததாக புகார் கொடுத்துவிட்டு போலிஸை கொஞ்சம் “கவனித்தால்”போதும் உடனடியாக கணவன் அவனது குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்படுவான்.
கணவன் குடும்பத்தோடு சிறையில் அடைபட்டிருக்கும் காலகட்டம்தான் பேரம் பேசுவதற்கான ஏற்ற தருணம். இந்த சமயத்தில் மருமகளின் தரப்பிலிருந்து ஒற்றர்கள் சென்று கணவனிடம் பேரம் பேசுவார்கள். “இந்த” அளவிற்கு பணம் கொடுத்தால் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்வார்கள். இந்தக்கட்டத்தில் பல கணவன்கள் பயந்துகொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பித்தால் போதும் என்று தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். இதற்கு அஞ்சாத கணவன்கள் அடுத்த கட்டத்தில் சிக்கிக்கொள்வார்கள்.
ஒருவழியாக சிறையிலிருந்து ஜாமின் பெற்று வெளியே வந்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு முறை மருமகள் தரப்பிலிருந்து ஒற்றர்கள் தூதுசெல்வார்கள். விவாகரத்து கொடுத்து, வரதட்சணை வழக்கை திரும்பப் பெறுவதற்கு “இந்த” அளவு ஒரு தொகை கொடுக்கவேண்டும் என்று பேரம் பேசுவார்கள்.
பொய் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறையில் சில நாட்கள் இருந்த அனுபவமும், நீதிக்காக நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நாயாக அலைந்து நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அனுபவமும் எந்த ஒரு வைராக்கியக்காரக் கணவனையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடும். இந்த தக்க தருணத்தைப் பயன்படுத்தி மருமகள் தரப்பு தங்களது “கணக்கை” சரியாக முடித்துக்கொண்டு உல்லாசமாக தங்களது “திருமணக் கனவு” நிறைவேறிய முழுத்திருப்தியுடன் தனது அடுத்தக் “கனவினை” நிறைவேற்றிக்கொள்வதற்காக “கணவனால் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான அபலை” என்ற பெயருடன் புதிய ஆளைத் தேடி புறப்பட்டுவிடுவார்கள்.
இதுதான் திருமணம் என்ற பெயரில் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக பல திருமணங்களில் நடந்துகொண்டிருக்கும் சட்டத்தின் துணையோடு நடக்கும் விபச்சாரம். அதைப் பற்றி டில்லி உயர்நீதிமன்றம் அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
DATE OF DECISION: 1 November, 2007
Crl.Appeal No. 696/2004 (Citations: I (2008) DLT 337 )
Narender Kumar And Anr. vs State (Govt. Of Nct Of Delhi)HON'BLE MR. JUSTICE SHIV NARAYAN DHINGRA“Every marriage that fails does not fail due to dowry demand or cruelties. The marriages do fail for several other reasons including the reason of incompatibility of the persons. A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. In many cases, where FIRs are filed under Section 498A IPC are quashed after settlements between the parties and the allegations made of cruelties etc. are withdrawn the moment a lump sum payment is received. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbours are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages.”
மேலே டில்லி உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள உண்மை எப்படி நன்றாக செயல்படுத்தப்படுகிறது என்பதை செயல்விளக்கத்துடன் கீழுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விளக்குகிறது.
கீழுள்ள வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்றால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2005ல் கணவன் விவாகரத்திற்கு விண்ணப்பத்திருக்கிறார். இதைப் பார்த்த மனைவி மூன்றாண்டுகளுக்குப் பிறகு 2008ல் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கெதிராக வரதட்சணை வழக்கு பதிவு செய்திருக்கிறார். பிறகு பேச்சுவார்த்தையில் 6 லட்ச ரூபாய் கொடுப்பதாக கணவன் சொன்னவுடன் மனைவி வரதட்சணை வழக்கைத் திரும்பப் பெற சம்மதித்திருக்கிறார். அதை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுவிட்டது.
இதில் அதிசயம் என்னவென்றால் வரதட்சணைக் கொடுமை என்பது இந்திய சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றமாக சட்டம் சித்தரிக்கிறது. அதனால்தான் புகார் கொடுத்தவுடனேயே கணவனைக் குடும்பத்தோடு கூட்டமாக கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணுக்காக அரசாங்கமே இலவசமாக இந்த வழக்கை எடுத்து நடத்துகிறது. அப்படியிருக்கும்போது பணம் கொடுத்தவுடன் எப்படி ஒரு அபலைப் பெண்ணுக்கும், மற்றும் சமுதாயத்திற்கும் எதிராக இழைக்கப்பட்ட ஒரு கொடிய குற்றம் அடிச்சுவடே இல்லாமல் மறைந்துபோகும்? உண்மையாகவே வரதட்சணைக் கொடுமையால் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த வேதனை மறைந்துவிடுமா?
அப்படியென்றால் இதுபோன்ற வழக்குகள் பணத்திற்காக போடப்படுகிறதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதா? அப்படியென்றால் இப்போது மேலே உள்ள வீடியோவை மற்றொருமுறை பார்த்துவிட்டு சிந்தித்துப் பாருங்கள்.
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 26.06.2009
CORAM: THE HONOURABLE MRS. JUSTICE ARUNA JAGADEESAN
CRL.O.P.No.25831 of 2006
This petition is filed to call for the records pertaining to the FIR in crime No.3 of 2005 on the file of the Inspector of Police, All Woman Police Station, Teynampet, Chennai and quash the same.
2. The petitioner is the husband of the second respondent and they were married on 02.06.2004. Due to difference of opinion and temporamental incompatibility they were separated on 28.03.2005. The petitioner has moved the Family Court for divorce and the second respondent herein appeared before the court and filed her counter. In the mean while, the second respondent lodged a criminal complaint on 20.04.2008 against the petitioner, his father, mother, Maternal uncle , Sister Amudha and sister's husband for offences punishable under sections 498 A, 406 and 506(ii) I.P.C. R/w 4 and 6 of Dowry Prohibition Act .
In the faimly court, settlement was arrived at, whereby the second respondent has received a sum of Rs.6,00,000/- (Rupees Six lakhs only) towards permanent alimony before the family court. She had agreed to withdraw the case initiated by her in crime no.3 of 2005 on the file of the first respondent. Mutual agreement for separation was filed before the family Court, which is as follows:
The First Party Arun has agreed to pay Rupees 6,00,000/-(Six Lakhs only) towards one time settlement of permanent alimony and maintanance to the second party, Radhika. The said amount of Rs.6,00,000/- (Rupees Six Lakhs only) shall be given by way of demand draft at the time of enquiry in the mutual consent O.P. Demand Draft No.471597 dated 27.07.2006 drawn on Bank of Baroda, Alwarpet Branch, Chennai. The Second party Radhika shall receive the demand draft at the time of recording evidence before the family Court.
The Second party Radhika has agreed to withdraw the police complaint and not to proceed with any other complaint against the first party or his family members.
10. In this case, in view of the settlement arrived at between the parties to the matrimonial dispute in the Family Court to secure the ends of justice quashing of the F.I.R becomes necessary. Accordingly the FIR in Cr.No.31 of 2005 is quashed.
மேலுள்ள தகவல்களைப் படித்தபிறகு உங்களுக்குள் இந்தியத்திருமணங்களைப் பற்றி ஒரு சரியான தெளிவு பிறந்திருக்கும். அந்தத் தெளிவிற்கு புத்தொளியூட்டுவதற்காக மற்றொரு துணுக்குச் செய்தி.
30/12/2010 தினகரன்
சென்னை: நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா, அவரது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்வதற்காக ரூ. 30 கோடி சொத்தை அவருக்கு வழங்க உள்ளார். நட்சத்திரங்களின் விவாகரத்துகளிலேயே இதுதான் 'காஸ்ட்லி' விவாகரத்து என கூறப்படுகிறது.
பிரபுதேவாவின் மனைவி ரமலத், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நயன்தாராவிடமிருந்து பிரித்து, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென விவாகரத்துக்கு ரமலத் சம்மதித்தார். பிரபுதேவா, ரமலத் இருவரும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்காக ரமலத்துக்கு 2 கார்கள், அண்ணாநகரில் உள்ள 3,440 சதுர அடி நிலம், கோயம்பேட்டில் வீட்டுடன் சேர்த்து ஆயிரம் சதுர அடி நிலம், ஐதராபாத்தில் வீடு, மேலும் ரூ. 10 லட்சம் பணம் தர பிரபு தேவா சம்மதித்தார். ஈஞ்சம்பாக்கத்திலுள்ள வீட்டை இரு மகன்களுக்கு வழங்குகிறேன் என¢றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
கோயம்பேடு, ஐதராபாத் வீடுகள், அண்ணாநகர் மற்றும் கோயம்பேட்டில் நிலம், 2 கார்கள் என ரமலத்துக்கு பிரபு தேவா வழங்கும் சொத்தின் மொத்த மதிப்பு ரூ. 30 கோடி என தெரியவந்துள்ளது. பெரிய தொகையை கொடுத்து மனைவியை பிரபு தேவா விவாகரத்து செய்வது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.