பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, December 11, 2010

உங்கள் பிள்ளைகளுக்காக ஒரு அருமையான காதல் கடிதம்

ஆண் பிள்ளைகளை பெற்றிருக்கும் பெற்றோர்களே, எதிர்காலத்தில் ஆண் பிள்ளைக்கு பெற்றோர் ஆகப்போகும் குடிமக்களே உங்களது பிள்ளையின் திருமணம் இந்தியாவில் நடக்கவேண்டுமென்றால் நீங்கள் இப்போது டிசம்பர் 31ற்குள் ஒரு காதல் கடிதம் எழுதவேண்டும். இது மிகவும் அவசியமானது. நீங்கள் எழுதும் இந்தக் காதல் கடிதத்தை இந்திய ராஜ்ய சபா விசாரணைக் குழுவிற்கு அனுப்பவேண்டும். நீங்கள் இப்போது இதைச் செய்தால்தான் உங்கள் மகன் எதிர்காலத்தில் இந்தியாவில் காதல், திருமணம் என்பது போன்ற வாழ்க்கையின் ஒரு பகுதியை அனுபவிக்கமுடியும்.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தவறான வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பல கொடிய பெண்கள் தவறாகப் பயன்படுத்தி பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சிதைப்பதோடு மட்டுமல்லாமல் பல அப்பாவி குழந்தைகள் மற்றும் வயதானவர்களையும் துன்புறுத்திவருகிறார்கள். இந்த உண்மை இப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது. அதனால் இந்த தவறான சட்டங்களை திருத்துவதற்காக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளுக்குப்பிறகு முன்வந்திருக்கிறது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்க ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது.

இந்த விசாரணைக் குழுவிற்கு நீங்கள் உங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினால்தான் இந்த சட்டத்தில் தக்க திருத்தங்கள் கொண்டுவருவார்கள். இந்த திருத்தங்கள் ஏற்படவில்லையென்றால் எதிர்காலத்தில் உங்களது மகன், மகள் ஆகியோரின் திருமண வாழ்க்கை தவறான இந்திய சட்டங்கள் மூலம் சிதைக்கப்பட்டுவிடும். இந்த தவறான சட்டங்களால் தற்போது பல குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றது. இந்த உண்மையை தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் www.498a.org. இதுபோன்ற இழிநிலை உங்களது பிள்ளைகளுக்கு ஏற்படாமல் இருக்கவேண்டுமென்றால் நீங்கள் கீழ்கண்ட கோரிக்கை மனுவை இரண்டு நகல்கள் எடுத்து மனுவின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இன்றே அனுப்பிவையுங்கள். உங்களது பிள்ளைகள் தங்களது இளைமைப் பருவத்தில் சுகமான காதலை அனுபவிக்க வேண்டுமென்றால் இன்று நீங்கள் இந்தக் கடிதத்தை காதல் கடிதமாக நினைத்து இந்திய ராஜ்ய சபா குழுவிற்கு அனுப்பவேண்டும்!


இந்திய ராஜ்ய சபா சட்டதிருத்தம் கொண்டுவருவதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்டு வெளியிட்டுள்ள அறிக்கை.


The Committee on Petitions of the Rajya Sabha, under the Chairmanship of Shri Bhagat Singh Koshyari, Member, Rajya Sabha, is considering a petition praying for amendments in Section 498A of Indian Penal Code, 1860. The petitioner in his petition has pointed out the extensive abuse and misuse of this provision of the Penal Code. According to the petitioner, the abused population undergoes tremendous harassment and torture. As these provisions of the penal code presently go, a complaint without much authenticity or any weight of evidence is enough to arrest the husband or the in-laws or anyone else named in the complaint, irrespective of whether any crime has taken place or not. The petitioner, accordingly, has prayed for suitable modification in section 498A of Penal Code so as to check its abuse and protect the interest of innocent persons.

2. The petition is available on the Rajya Sabha's website (www.rajyasabha.nic.in) under the link: Committees → Standing Committees → Committee on Petitions → Petitions with the Committee.

3. The Committee has decided to undertake consultations with a wide cross-section of the society and invites written memoranda thereon. Those desirous of submitting memoranda to the Committee may send two copies (each in English and Hindi) thereof to Shri Rakesh Naithani, Joint Director, Rajya Sabha Secretariat, Parliament House Annexe, New Delhi – 110 001 (Tel: 011-23035433(O), 23794328 (Telefax) and E-mail: rsc2pet@sansad.nic.in) latest by 30th December, 2010.

4. Comments/suggestions, etc. submitted to the Committee would form part of its record and would be treated as confidential. Any violation in this regard may attract breach of privilege of the Committee.

5. Those who are willing to appear before the Committee besides submitting written comments/suggestions may indicate so. However, the Committee’s decision in this regard shall be final.


நீங்கள் அனுப்பவேண்டிய கோரிக்கை மனுவின் நகல் பின்வரும் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டு நகல்கள் எடுத்து பின்வரும் முகவரிக்கு இன்றே அனுப்பிவிடுங்கள்.

Shri Rakesh Naithani,
Joint Director
Rajya Sabha Secretariat, Parliament House Annexe
New Delhi – 110 001
E-mail: rsc2pet@sansad.nic.in


எதிர்கால இந்திய சமுதாயத்தின் நலன் கருதி உங்களது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இந்த கோரிக்கை மனுவை அனுப்பச் சொல்லுங்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த இணைப்பிலிருந்து NRI Template MS-Word வடிவத்தில் மனுவின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவில் வசிப்பவர்கள் இந்த இணைப்பிலிருந்து General Template MS-Word வடிவத்தில் மனுவின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வசதிக்கேற்ப இந்த மனுவை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் மனு மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று ராஜ்ய சபா குழு உறுதியளித்திருக்கிறது.

4. Comments/suggestions, etc. submitted to the Committee would form part of its record and would be treated as confidential. Any violation in this regard may attract breach of privilege of the Committee.




No comments: