பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, December 27, 2010

மனைவியால் இப்படியும் ஆபத்து வருமா!

இந்தியாவில் பிறந்த ஆண்களுக்கு ஆபத்துக்கள் பல வடிவங்களில் வரலாம். அவற்றில் முக்கியமாக திருமணம் என்ற பெயரில் வரும் ஆபத்துதான் மிகவும் அபாயகரமானது.

திருமணத்திற்குப் பின் மனைவிக்கு கள்ளக்காமம் ஏற்பட்டு அதற்குக் கணவன் தடையாக இருப்பதாக மனைவி கருதினால் உடனடியாக சட்டத்தின் துணையோடு அந்தத் தடையை தகர்த்தெறிய பெரும்பாலான மனைவியர் பயன்படுத்தும் ஆயுதம்தான் “வரதட்சணை கொடுமை” என்ற பெயரில் ஏவிவிடப்படும் பொய் வரதட்சணை வழக்குகள் - IPC498A.

இந்த வழிமுறையில் தனியாக கூலிப்படை வைத்துக் கணவனைக் கொல்லவேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக காவல்துறையும், நீதித்துறையும் இதுபோன்ற மனைவியருக்கு செலவில்லாமல் இலவச “சர்வீஸ்” செய்து தருவார்கள். இந்த பொய் வரதட்சணை வழக்குகள் கள்ளக்காமம் தவிர தனிக்குடித்தனம் போவதற்கு, மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்டுவதற்கு, கணவன் வீட்டு சொத்துக்களை பிடுங்குவதற்கு என்று வேறு பல உயரிய நோக்கங்களுக்காகவும் பல மனைவியரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த உலகறிந்த உண்மை!

பொய் வழக்கில் குடும்பத்தோடு சிக்கும் கணவனுக்கு காவல்நிலையம், நீதிமன்றம் என்று அலைந்துகொண்டிருக்கும்போது மனைவி கள்ளக்காமத் துணைவனுடன் சல்லாபமாக ஊர் சுற்றித் திரிந்தாலும் அதைத் தட்டிக்கேட்க முடியாது. அதே சமயம் பார்க்கின்ற ஊரார்கள் கணவன் வரதட்சணை கொடுமை செய்துவிட்டான், பாவம் இந்தப் பெண் என்று அமோகமான ஆதரவு தருவார்கள். இந்த முறையில் ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் - ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்கு மூலம்: 1. கள்ளத்துணைவனையும் அடையலாம், 2. தடையாக இருக்கும் கணவனையும் சட்டத்தின் துணையோடு அடக்கலாம், 3. அதே சமயம் தனக்கு எந்த களங்கமும் ஏற்படாமல் ஊராரின் அனுதாபத்தையும் பெறலாம். அதனால்தான் இந்த “வரதட்சணைக் கொடுமை” வழிமுறை பல படித்த நகரத்து மாதர்களால் பெரும்பாலும் பின்பற்றப்படும் நாகரீகமான முறையாக இருக்கிறது. இதற்கு மற்றொரு பெயரும் உண்டு. அதுதான் “பெண் சுதந்திரம்”.

இரண்டாவது வகையில் கள்ளக்காமத்திற்கு தடையாக இருக்கும் கணவனை கள்ளத் துணைவனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளுவது. இந்த முறையை பெரும்பாலும் கீழ்மட்டத்தில் இருக்கும் பெண்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கான செய்திதான் கீழே கொடுக்கப்ட்டுள்ளது.

மொத்தத்தில் இளைஞர்களுக்கு இந்தியாவில் திருமணம் செய்வதால் வரப்போகும் ஆபத்து இந்தவகையில்தான் இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. அவரவர் தலைவிதியைப் பொறுத்து பொய் வழக்கில் சிக்குவது முதல் உயிரே பறிபோகும் அளவிற்கு எந்த வகையிலாவது இருக்கும். அது எந்த வடிவத்திலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால் நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


இந்தியாவில் திருமணம் செய்தால்தானே இந்த ஆபத்து உங்களுக்கு ஏற்படும் என்று நீங்கள் குறைத்து மதிப்பீடு செய்துவிடாதீர்கள். இந்தியாவில் தவறான பெண்ணை திருமணம் செய்தவனுக்கு நீங்கள் நண்பனாகவோ, பக்கத்து வீட்டுக்காரனாகவோ, அல்லது தூரத்து உறவினராக இருந்தாலும் இந்த ஆபத்து உங்களை ஒருகை பார்க்காமல் விட்டுவிடாது. இந்திய சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அதனால்தான் இன்றும் தினம் தினம் பல குடும்பங்கள் எவனோ ஒருவனின் மனைவி கொடுத்த பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சுற்றமும் நட்பும் சூழ புழல் சிறைக்கு விசாரணைக் கைதி என்ற பெயரில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

IPC498A. HUSBAND OR RELATIVE OF HUSBAND OF A WOMAN SUBJECTING HER TO CRUELTY: Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine. Section 498A of the Indian Penal Code, is a criminal offense. It is a cognizable, non-bailable, and non-compoundable offense.


தவறான சில போதனைகளால் இப்படி ஒரு ஒருதலைபட்சமான சட்டத்தை உணர்ச்சிவசப்பட்டு சிந்திக்காமல் அவசரப்பட்டு எழுதிவிட்டோமே என்று கொல்லிக்கட்டையால் தலையை சொறிந்துகொண்டதுபோல இப்போது இந்திய அரசாங்கமே இந்த சட்டத்தை எப்படி திருத்தி அமைக்கலாம் என்று திண்டாடிக்கொண்டிருக்கிறது. அந்த உண்மையை இங்கே சென்று பாருங்கள் “
Rajya Sabha Invites Public Suggestions to Amend Section 498A of IPC

மொத்தத்தில் இந்தியத் திருமணமேடை ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் தனகமேடைதான். இந்தியாவில் பிறந்தவர்களின் தலையெழுத்து அவ்வளவுதான்! மேலுள்ள இந்தக் கூற்றுக்களை உங்களால் நம்பமுடியவில்லையென்றால் 498a.org என்ற இந்த இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள்.கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவனை கொன்ற மனைவி

தினகரன் 24/12/2010

புதுடெல்லி : டெல்லி முகந்த்பூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ரேணு(28). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டு ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் சங்கர் வேலைபார்த்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதியன்று போலீஸ் நிலையத்தில் ரேணு ஒரு புகார் அளித்தார். அதில், “20ம் தேதி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்ற சங்கர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, சங்கருக்கும், ரேணுவுக்கும் அடிக்கடி தகராறு நடந்தது தெரிந்தது. உடனே சங்கரின் தந்தை போலா ஷாவிடம் விசாரித்தபோது, “சங்கருடன் வேலை பார்த்த ராஜு(23) என்பவருக்கும், ரேணுவுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. அதுதொடர்பாகத்தான் ரேணுவுக்கும் சங்கருக்கும் தகராறு வரும்’’ என்று போட்டு உடைத்தார்.

அதைத் தொடர்ந்து ரேணுவை போலீசார் விசாரித்தனர். முதலில் ஒன்றுமே தெரியாது என்று அப்பாவி போல ரேணு அழுது சாதித்தார். ‘உரிய’ முறையில் விசாரித்தபோது கள்ளக்காதலன் ராஜுவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ரேணு, ராஜு இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது வெளிவந்த தகவல்கள் வருமாறு:

சங்கர் & ரேணு தம்பதி முதலில் வாசிர்பூர் தொழிற்பேட்டை பகுதியில் குடியிருந்தனர். பக்கத்து வீட்டில் வசித்த ராஜுவுடன் ரேணுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவன் இல்லாத சமயத்தில் உல்லாசமாக பொழுதை கழித்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானதும், வேறு இடத்துக்கு குடியேற சங்கர் முடிவு செய்தார். அதன்படி, 3 மாதங்களுக்கு முன் முகந்த்பூருக்கு வந்தனர். அங்கு வந்தபிறகும் ரேணு & ராஜு கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் சங்கருக்கும் ரேணுவுக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.

சங்கரை தீர்த்துக்கட்டி விட்டால் ராஜுவுடன் சந்தோஷமாக வாழலாம் என்று ரேணு முடிவு செய்தார். அதை ராஜுவும் ஏற்றுக் கொண்டார். இருவரும் சேர்ந்து சதித்திட்டத்தை தீட்டினர். இந்நிலையில், சம்பவத்தன்று தனது டெம்போவில் வாசிர்பூரில் உள்ள ராஜு வீட்டுக்கு சங்கர் சென்றார். ராஜுவின் தாயைச் சந்தித்து, “ரேணுவை பார்க்க முகந்த்பூருக்கு ராஜு வருகிறான். கண்டித்து வையுங்கள்“ என்று கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அதற்குள் சங்கரின் டெம்போவினுள் ராஜு ஏறி, பின்பக்கத்தில் ஒளிந்து கொண்டார். பாய் பர்மானந்த் சவுக்கில் டெம்போ சென்று கொண்டிருந்தபோது, வண்டியை நிறுத்துமாறு ராஜு சத்தம் போட்டார். திடுக்கிட்ட சங்கர் உடனே டெம்போவை நிறுத்தினார். வண்டியைவிட்டு இறங்கும்படி ராஜுவிடம் கூறியதற்கு, “வண்டியில் ஒரு நட் லூசாக இருக்கிறது. அதை டைட் பண்ணிக்கோ’’ என்று கூறினார். ராஜு கூறிய இடத்தில் ஒரு நட் லூசாக தொங்குவதைக் கண்ட சங்கர், உடனே ஸ்பேனரைக் கொண்டு வந்து அந்த நட்டை டைட் செய்வதற்காக குனிந்தார். அப்போது, சங்கரின் பின்கழுத்தில் துப்பாக்கியால் ராஜு சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் இறந்தார். பிறகு, சடலத்தை டெம்போவில் ஏற்றிச் சென்று, சோனேபட் அடுத்துள்ள பரோட்டா அக்பர்பூரிலுள்ள நிலத்தில் வீசியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.
No comments: