பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, December 23, 2010

நீதிபதிகள் செய்த தில்லுமுல்லு?



6 முன்னாள் நீதிபதிகளுக்கு சி.பி.ஐ. கோர்ட் சம்மன்
தினகரன் 23/12/2010

காசியாபாத் : பிராவிடன்ட் பண்ட்(பி.எப்.) நிதிமோசடி வழக்கில் 6 முன்னாள் நீதிபதிகளுக்குசிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

உ.பி.மாநிலம், காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிராவிடன்ட் பண்ட் நிதியில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ராம ஜெயின் என்பவர் இதை கண்டுபிடித்து, கவிநகர் போலீசில் புகார் செய்தார்.


மொத்தம் ரூ. 7 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊழலுக்கு முக்கிய காரணமாக இருந்த அசுதோஷ் அஸ்தானா என்பவர் சிறையில் உள்ள போது இறந்தார். இவர் கொடுத்த வாக்குமூலத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,

முன்னாள் நீதிபதிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்பின், சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு காசியபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஏ.கே.சிங் விசாரித்தார். முன்னாள் நீதிபதிகள் ஆர்.பி.யாதவ், ஆர்.பி.மிஸ்ரா, ஆர்.என்.மிஸ்ரா, ஆர்.எஸ்.சவுபே, அருண்குமார், சிங் ஆகியோர் உள்பட மொத்தம் 70 பேருக்கு சம்மன் அனுப்பி, ஜனவரி 30ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

அப்படியென்றால் இவர்களின் பதவிக்காலத்தில் கொடுத்த தீர்ப்புகளின் நிலை என்ன? எத்தனை அப்பாவிகள் தண்டிக்கப்பட்டார்களோ?

நாட்டில் நடக்கும் அநீதியையும், லஞ்ச ஊழல்களையும் தக்கமுறையில் தடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றுபவர்களை தண்டிக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உள்ளது. இவர்களே இப்படியிருந்தால் அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை யார் தட்டிக்கேட்கமுடியும்? இந்த வெளிப்பாடுதான் இப்போது செய்தித்தாள்களில் தினம்தினம் வரும் கோடிக்கணக்கான ஊழல் செய்திகள். அப்பாவி மக்களை யார் காப்பாற்றப்போகிறார்களோ?

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் அப்பாவிகள் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து நீதியைப் பெறலாம் என்று நினைத்தால் அங்கே அவர்களுக்கு நீதி கிடைக்குமா?



No comments: