பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, November 4, 2010

இது உங்களுக்கு நடக்கக்கூடாது

திருமண தகனமேடை எவ்வளவு ஆபத்தானது. இது கொலையா அல்லது தற்கொலையா?

புகார் கொடுக்கச் சென்ற கணவன் போலீஸ் நிலையத்தில் தற்கொலை
11/4/2010 தினகரன்

புதுடெல்லி : விஜய் விகார் போலீஸ் நிலையத்தில் மனைவி, கள்ளக்காதலன் மீது புகார் கொடுக்கச் சென்ற கணவன், தூக்கில் பிணமாக தொங்கினார்.

விஜய் விகார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் விவேக். இவர், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய சொந்த கிராமத்துக்கு சென்றார். கிராமத்தில் சில வேலைகளை முடித்து விட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

வீட்டுக்கு வந்தபோது, மனைவியும், கள்ளக்காதலனும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கூறினார். சிறிது நேரத்தில் வேனில் போலீசார் வந்தனர். போலீசாரைப் பார்த்ததும் விவேக், “என் மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது புகார் கொடுக்க வேண்டும்’’ என்றார். உடனே அவரை வேனில் போலீசார் ஏற்றிக்கொண்டனர். விவேக்கின் மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினர். விவேக்குடன் போலீஸ் வேன் புறப்பட்டது.

விஜய் விகார் போலீஸ் நிலையத்தை வேன் அடைந்த சில நிமிடங்க ளில், கட்டுப்பாட்டு அறை க்கு இன்னொரு போன் வந்தது. குறிப்பிட்ட இடத்தில் அடிதடி தகராறு நடப்பதாக தகவல் கிடைத்தது. விவேக்கை போலீஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வேனில் போலீசார் புறப்பட்டனர். அடிதடி தகராறு பற்றி விசாரணை நடத்தி விட்டு போலீசார் திரும்பி வந்தபோது, போலீஸ் நிலையத்தின் உத்திரத்தில் தூக்கு போட்டு விவேக் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.



No comments: