பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, November 19, 2010

இந்திய ஆண்களுக்கு ஆபத்து

இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது.

ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம்
தினமலர் நவம்பர் 19, 2010 செய்தியின் ஒரு பகுதி


என் சோகக் கதையை கேளு தாய்குலமே! பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.

"இது உண்மைதானா' என மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் ராஜாமணி கூறியதாவது : இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.

ஆண்களுக்கு சிறை - பெண்களின் தந்திரம்:

ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.தனசேகரன் கூறியது: சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

அக்கறை இல்லையா ஆண்களுக்கு? பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.

இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் கூறியதாவது:

ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர்.

பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.

அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.


==========

இளைஞர்களே,

நீங்கள் உயிரோடு இருக்கவேண்டுமானால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் ஒரே வழி. இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி வேலை போய்விடும், மானம் மரியாதை போய்விடும், ஆயுள் முழுதும் நீதிமன்றத்தில் குடும்பத்தோடு வயதான பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் அலைய வேண்டும், வயதான பிறகுதான் உங்களுக்கு நீதி கிடைக்கும். அப்போதுதான் நீங்கள் நிரபராதி என்று நீதிமன்றத்தில் வழக்கு முடிவடையும். இதுபோன்ற வாழ்க்கைதான் இந்தியத்திருமணத்தில் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவான உண்மை.

நீங்கள் கற்ற கல்வியும், திறமையும் வீணாகாமல் உழைத்து வாழ்வில் உன்னத நிலையை அடைய வேறு நாடுகளில் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

வாழும்போதே நரகத்தைக் காணவேண்டுமென்றால் இந்தியாவில் திருமணம் செய்து அந்தத் துன்பத்தை உங்கள் குடும்பத்தோடு அனுபவியுங்கள்.

இது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள கீழ்கண்ட இணைப்பில் வரும் ஒவ்வொரு வலைத்தளத்தையும் சென்று பாருங்கள்.
வாழும் நரகம்

இவற்றை உறுதிப்படுத்தும்விதமாக சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு அப்பாவிக் கணவனுக்கெதிராக மனைவி கொடுத்த பொய் வரதட்சணை வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில் இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களின் அவலநிலையைப் பற்றி கூறியுள்ள அப்பட்டமான உண்மையை நீங்களே படித்து இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA

CRIMINAL APPELLATE JURISDICTION

CRIMINAL APPEAL NO. 1512 OF 2010

(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)

J U D G M E N T

August 13, 2010


The learned members of the Bar have enormous social responsibility and obligation to ensure that the social fiber of family life is not ruined or demolished. They must ensure that exaggerated versions of small incidents should not be reflected in the criminal complaints. Majority of the complaints are filed either on their advice or with their concurrence. The learned members of the Bar who belong to a noble profession must maintain its noble traditions and should treat every complaint under section 498-A as a basic human problem and must make serious endeavour to help the parties in arriving at an amicable resolution of that human problem. They must discharge their duties to the best of their abilities to ensure that social fiber, peace and tranquility of the society remains intact. The members of the Bar should also ensure that one complaint should not lead to multiple cases.

35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.

இந்தியத் திருமணத்தில் இருக்கும் இதுபோன்ற இன்னல்களைப் பற்றித் தெரியாமல் இந்தியாவில்திருமணம் செய்து தினம் தினம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் ஆண்கள் கீழுள்ள இணைய தளத்தில் ஆறுதல் பெறலாம்.
அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம்
2 comments:

Suresh Kumar said...

பெண் வீட்டார்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதில்லை என்ற முடிவில் எல்லோரும் வந்துவிட்டால் இந்த வழக்குகளுக்கும் அவசியமில்லை . மற்றும் கணவன் மனைவியின் தனிப்பட்ட காரியங்களில் பெற்றோர்களின் தலைஈடல் இல்லாமல் இருப்பதும் சிறந்தது .

தகனமேடை said...

சுரேஷ் குமார் அவர்களே,

தங்களின் கருத்திற்கு நன்றி.

தாங்கள் இந்த பதிவில் இருக்கும் உட்கருத்தை கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள். இந்தியாவில் வரதட்சணை வாங்கி திருமணம் செய்யும் அயோக்கியர்களையும், அதனை ஊக்குவிக்கும் விதமாக வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்யும் மகா அயோக்கியர்களையும் சட்டங்கள் தண்டிப்பதில்லை. மாறாக வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்பவர்களை தண்டிக்க மட்டுமே இந்த சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கூற்று உண்மையில்லை என்று கருதினால் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை நடப்பதில்லை என்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா? அப்படி சட்டத்திற்று விரோதமாக நடக்கும் திருமணங்களில் எத்தனை பேர் இதுவரை வரதட்சணை கொடுத்த மற்றும் வாங்கிய குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

மொத்தத்தில் வரதட்சணை சட்டங்கள் என்பவை கணவனை தன் வழிக்குக்கொண்டுவருவதற்கு மனைவியரால் அரசாங்கத்தின் துணையோடு நடத்தப்படும் ஒரு சட்ட தீவிரவாதம் என்று இந்திய உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இதுதான் உண்மை.

நீங்கள் நினைப்பதுபோல் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தால் இந்த வழக்கு வராது என்பது 100% தவறான ஒரு கற்பனை. இதுபோல அப்பாவித்தனமாக இருந்து இந்தியத் திருமண தகனமேடையில் சிக்கிகொள்ளாதீர்கள்!
வரதட்சணை வாங்காதவர்கள்மீது மட்டும்தான் இந்த சட்டங்களை வேறுவித நோக்கத்திற்காக பயன்படுத்திவருகிறார்கள்.

இந்த வலைத்தளத்திலுள்ள அனைத்து பதிவுகளையும் படித்தால்தான் உங்களுக்கு உண்மை புரியும்.

மேலும் பல உண்மைகள் தெரியவேண்டுமென்றால் மருமகள் என்ற தளத்திற்கு சென்று பாருங்கள்.