செஞ்சி : செஞ்சி அருகே மருமகன் மீது ஆசிட் ஊற்றிய பாசக்கார மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குணசேகரன் (33). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த தங்கராசு மகள் கல்பனாவுக்கும் (30), ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தீபாவளியன்று குணசேகரனுக்கும், கல்பனாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.இதில் கோபித்துக்கொண்டு கல்பனா தாய் வீடு சென்றார். இது குறித்து முறையிட குணசேகரன், கடந்த 8ம் தேதி கல்பனாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடந்த தகராறில் கல்பனாவின் தந்தை தங்கராசு, குணசேகரன் மீது ஆசிட் ஊற்றினார். இதில் குணசேகரனின் முகம், கை, கால், கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து, தங்கராசுவை தேடி வருகின்றனர்.
===========
இந்தியாவில் திருமணம் செய்பவர்களுக்கு பொய் வரதட்சணை வழக்குகள் கண்டிப்பாக பரிசாகக் கொடுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த ஆண்டு தீபாவளி முதல் “ஆசிட் வீச்சும்” உண்டு என்பது வருங்காலத்தில் இந்தியாவில் திருமணம் செய்வதற்காக காத்திருக்கும் பல அப்பாவி இளைஞர்களுக்கு ஒரு போனஸ் செய்தி.
No comments:
Post a Comment