பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, November 13, 2010

மருமகனே ஜாக்கிரதை - கூலிப்படை வருகிறது

இந்தியாவில் நடக்கும் திருமண வாழ்க்கை முறையில் இப்போது பெரும்பாலும் நடந்துவரும் நடைமுறை (modern trend) என்னவென்றால் பெண் யாரையாவது காதலித்து திருமணம் செய்துகொள்வாள். அந்தக் காதலன் தவறான ஆளாக இருந்தாலும் தங்களது மகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை கூறி திருத்தமாட்டார்கள். மாறாக மகளின் போக்கிற்கு விட்டுவிட்டு பிறகு திருமணமான பிறகு தங்களது வேலையை பெண்ணின் பெற்றோர்கள் ஆரம்பித்து விடுகிறார்கள்.

தங்களுக்குப் பிடிக்காதவன், அல்லது நடத்தை சரியில்லாதவன் என்று திருமணத்திற்கு முன்பே தெரிந்திருந்தாலும் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு அறிவுரை கூறிஅந்தத் திருமணத்தை தடுத்துநிறுத்தலாம். ஆனால் அப்படி செய்யாமல் திருமணத்திற்குப் பிறகு தங்களது இயலாமையை வெளிப்படுத்த அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் பொய் வரதட்சணை வழக்குகள் மற்றும் செய்திகளில் வரும் கூலிப்படை வைத்து மாப்பிள்ளையை கொலை செய்யும் சம்பவங்களும்.

இளைஞர்களே,

ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் திருமணம் செய்துவிட்டால் பெண்ணின் பெற்றோர்களுக்கு அவர்களின் மகள்கள் செய்யும் செயல்கள் மட்டுமே சரியானது. பெண்ணின் கணவன்தான் பெண்ணுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் போலிஸை ஏவிவிடுவார்கள். அல்லது கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்துவிடுவார்கள்.

அதிகம் இல்லை. ரூ. 5000 கொடுத்தால் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து உங்களை கொல்லாமலே உங்கள் வாழ்க்கையை சிதைக்க பல நிலையங்கள் இருக்கின்றன. அதேபோல ரூ. 1.5 லட்சம் கொடுத்தால் போதும் உங்கள் கதையையே முடிக்க ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பின்வரும் செய்தியிலிருந்து தெரிகிறது.

இந்தியாவில் திருமணம் செய்து மானத்தையும், உயிரையும் விட்டுவிடாதீர்கள்!


தினமலர் நவம்பர் 12, 2010

மதுரை : மதுரையில் நேற்று முன் தினம் கூலிப்படையை ஏவி, மருமகனை கொலை செய்த வழக்கில், மாமனார், மாமியார், கூலிப்படையினர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய கூலியாக கொடுக்கப்பட்ட ரூ.1.50 லட்சத்தில் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(48). இவரது மகள் கார்த்திகாதேவி, அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணனை காதலித்து திருமணம் செய்தார். ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் மகளை, தொடர்ந்து லட்சுமணன் அடித்து துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்த முருகேசன், கூலிப்படையை ஏவி, நேற்று முன் தினம் அவரை கொலை செய்தார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முருகேசனின் இரண்டாவது மனைவி மகாலட்சுமியின் மகள் கார்த்திகாதேவி. தேனியில் பி.டெக் இரண்டாமாண்டு படிக்கும்போது, பழங்காநத்தத்தை சேர்ந்த லட்சுமணனை காதலித்தார். "அவர் வேறு சமூகம், எட்டாம் வகுப்பு படித்தவர், வேலைக்கு செல்லவில்லை' என்பதால் மகள் காதலை முருகேசன் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். ஆனால் கார்த்திகாதேவி பிடிவாதமாக இருந்ததால், ஏற்றுக் கொண்டனர். திருமணம் ஆன நாள் முதல் லட்சுமணன் வேலைக்கு செல்லாமல், குடிபோதையில் கார்த்திகாதேவியை அடித்து துன்புறுத்தினார். ஆரப்பாளையம், கூடல்புதூர், கல்மேட்டில் தனிக்குடித்தனம் வைத்தும் திருந்தவில்லை.

கூலிப்படையாக மாறிய நண்பர்கள்: கூடல்புதூரில் லட்சுமணன் குடியிருந்தபோது, அவரை கொலை செய்ய முருகேசன் திட்டமிட்டார். பழங்காநத்தத்தைச் சேர்ந்த நண்பர்கள் ராமர்(25), அவரது தம்பி லட்சுமணன்(24), மணி(24), தினேஷ்(24) ஆகியோரை அணுகி, "கொலை செய்தால் 3 லட்சம் ரூபாய் தருகிறேன்; வழக்கு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன்' என்றார். இதைதொடர்ந்து, லட்சுமணனை கொலை செய்ய வீட்டிற்கு சென்றபோது, அவர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின், ஒரு மாதத்திற்கு முன், தனது வீட்டு மாடியில் மகளையும், மருமகனையும் குடித்தனம் வைத்த முருகேசன் ஆம்னி வேனும் வாங்கி கொடுத்தார். தவிர, 10 ஆயிரம் ரூபாய், 25 பவுன் நகையும் கொடுத்தார். ஆனாலும் லட்சுமணன் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில், மேலூர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த லட்சுமணன், 15 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்தார். இதன்பிறகும் மகளை அடித்து துன்புறுத்தியதால், சூரசம்ஹார தினமான நேற்று முன் தினம் எப்படியும் லட்சுமணனை கொலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முருகேசன்.

கொலையை உறுதி செய்த மாமனார்: நேற்று முன் தினம் காலை மேலூர் கோர்ட்டிற்கு கையெழுத்திட, ஆம்னி காரில் செல்ல லட்சுமணன் திட்டமிட்டிருந்தார். "அவர் நடந்து சென்றால்தான் கொலை செய்வது எளிது' என்று கருதிய முருகேசன், ஆம்னி வேன் டயர்களை பஞ்சராக்கினார். இதனால் அவர் எதிர்பார்த்தபடியே, லட்சுமணன் காலை 9 மணிக்கு மாடக்குளம் ரோட்டில் நடக்க ஆரம்பித்தார். ராமர், மணி உட்பட 4 பேர், அவரை ஓட ஓட விரட்டி, ஓட்டலுக்குள் வெட்டி கொலை செய்தனர். பின், வீட்டில் இருந்த முருகேசனுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்து உறுதி செய்த முருகேசன், கூலிப்படையினரை பைகாரா மலைப்பகுதிக்கு வரச்சொல்லி, அட்வான்சாக ரூ.1.50 லட்சம் கொடுத்தார்.

மாமியார் கைது: இவை அனைத்தும் முருகேசன் மனைவி மகாலட்சுமிக்கும்(40) தெரியும் என்பதால், அவரும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த மணி, ராமர், லட்சுமணன், தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய கூலியாக பெற்ற ரூ.1.50 லட்சத்தில் ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்பு உடைய ராஜாராம் என்பவரை திலகர் திடல் உதவி கமிஷனர் கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

கொலைக்கு வழிவகுத்த போலீஸ் அணுகுமுறை: நவ.,9 இரவு 1.30 மணிக்கு மகள் கார்த்திகாதேவியை அடித்து துன்புறுத்துவதாக லட்சுமணன் மீது சுப்பிரமணியபுரம் போலீசில் மாமியார் மகாலட்சுமி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்துவிட்டு, லட்சுமணனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அன்றே வழக்குப்பதிவு செய்து, முறைப்படி "கவனித்திருந்தால்' லட்சுமணன் பயந்து ஓரளவிற்காவது திருந்தி இருப்பார். அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்து, முருகேசனும் மனம் மாறியிருப்பார். இப்போது கணவரையும் இழந்து, பெற்றோரையும் பிரிந்த ஆறு மாத கர்ப்பிணியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

தடயத்தை அழித்த ஓட்டல் உரிமையாளர் கைது: கொலை நடந்த லோகேஷ் ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர் சரவணன். கேன்களில் டீ சப்ளை செய்பவர். லட்சுமணனை கொலை செய்து விட்டு, கொலையாளிகள் வெளியே சென்ற பின், பயந்து போன சரவணன் தரப்பினர், சுவற்றில் படிந்த ரத்தக்கறைகளை தண்ணீரைக் கொண்டு கழுவி உள்ளனர். மேலும், லட்சுமணன் உடலை ஓட்டலுக்கு வெளியே வீசிவிட்டு, கதவை மூடியுள்ளனர். தடயத்தை அழித்ததால் சரவணனை போலீசார் கைது செய்தனர்.No comments: