பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, April 20, 2011

திருமணமே விபச்சாரமா?

திருமணம் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் பல திருமணங்கள் விபச்சாரம்போல்தான் மாறிவிட்டிருக்கிறது.

நன்றாக வசதியான ஆளை பிடித்து திருமணம் செய்து பிறகு சில மாதங்களிலேயே பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து காவல்நிலையம், நீதிமன்றம் என்று அலையவைத்துப் பிறகு இடைத்தரகர்கள் மூலம் பேரம்பேசி பணம் சம்பாதிக்கும் எளிய வழிமுறை இப்போது இந்தியாவில் திருமணம் என்ற பெயரில் நடந்துவருகிறது என்று பல இளைஞர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த விஷயம் எப்போதோ இந்திய நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுவிட்டது. அது இப்போது வெளிப்படையான வியாபாரமாகவே செய்தித்தாளில் வந்துவிட்டது. இரண்டையுமே படித்து இப்போதாவது தெளிவு பெறுங்கள்.

Delhi High Court

Crl.Appeal No. 696/2004 Date: 01.11.2007


Every marriage that fails does not fail due to dowry demand or cruelties. The marriages do fail for several other reasons including the reason of incompatibility of the persons. A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. In many cases, where FIRs are filed under Section 498A IPC, petitions are being filed under Section 482 Cr.P.C. for quashing of FIRs after settlements between the parties and the allegations made of cruelties etc. are withdrawn the moment a lump sum payment is received. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbours are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages.



திருமணம் என்ற பெயரில் நாகரிக விபசாரம் திருச்சி அருகே பிடிபட்டது மோசடி கும்பல்
தினமலர் 20-4-2011


துறையூர் : திருமணம் என்ற பெயரில், நவீன விபசாரம் செய்து பிடிபட்ட கும்பலிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூர் கடைவீதியைச் சேர்ந்தவர் குமார் (35). இவரது தந்தை பகதூர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், துறையூரில் பேன்சி வியாபாரம் செய்து வருகின்றனர்.

குமாருக்கு திருமணம் செய்ய, சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள சுகம்லால் பதிசந்த் என்ற புரோக்கரை, பகதூர் அணுகியுள்ளார். புரோக்கரும், ராஜஸ்தான், பிகானீர் பகுதியைச் சேர்ந்த பூஜாகுமாரி (24) என்ற பெண்ணை, தன் வீட்டில் வைத்தே காட்டினார். அப்போது, பூஜாகுமாரியின் தந்தை ராஜேஷ்குமார் ஜீ ஜெயின் ரன்கா, தாய் ரேகாபாய், மாமா விஜயராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பூஜாகுமாரி குடும்பம் சென்னையில் தொழில் செய்வதாக, புரோக்கர் கூறினார். திருமணத்தை உடனடியாக வைத்துக்கொள்ளுமாறு, குமார் குடும்பத்தினரை புரோக்கர் வற்புறுத்தியதால், 2010 ஏப்ரலில், சென்னையில் குமார் - பூஜாகுமாரி திருமணம், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஆடம்பரமின்றி நடந்தது.

திருமணம் நடக்கவிருந்த சில நாட்களுக்கு முன், பூஜாகுமாரியின் தந்தைக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தை சரிசெய்யவும், திருமண செலவுக்காகவும், குமார் குடும்பத்தினர் புரோக்கர் மூலம், 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு, ஏப்., 12ம் தேதி, துறையூரில் குமாருக்கும், பூஜாகுமாரிக்கும் திருமண வரவேற்பு நடந்தது. இதிலும், பூஜாகுமாரி தரப்பில் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணம் முடிந்து, பூஜாகுமாரி, 10 நாள் மட்டுமே குமாருடன் குடும்பம் நடத்தினார். அதன்பின், "ராஜஸ்தானில் என் அக்காவுக்கு குழந்தை பிறந்துள்ளது; பார்த்து விட்டு வருகிறேன்' என்று கூறிச் சென்ற பூஜாகுமாரி, பல நாளாகியும் வீடு திரும்பவில்லை; அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. குமாரும், அவரது குடும்பத்தினரும் பலவகைகளில் தொடர்பு கொண்டும், அவர்களை பிடிக்க முடியவில்லை.

பெண்ணின் மாமா விஜயராஜை தொடர்பு கொண்டபோது, அவரும் சரியான பதில் தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமார், ராஜஸ்தானுக்கே சென்று பார்த்த போது, அங்கு பூஜாகுமாரி கொடுத்த முகவரியில் அப்படி ஒருவர் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து குமார், புரோக்கர் சுகம்லால் பதிசந்தை அணுகி, பூஜாகுமாரி மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவரோ, "திருமணம் செய்து வைத்ததோடு என் வேலை முடிந்து விட்டது' எனக் கூறி கழன்று கொண்டார்.

இதுகுறித்து குமார், முசிறி போலீசில் அப்போது, புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், குமாரின் உறவினர் ஒருவர், பெங்களுரில் பூஜாகுமாரியையும், அவரது குடும்பத்தாரையும் பார்த்து, குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களை பிடித்து வைக்குமாறு கூறிய குமார், பெங்களுரு புறப்பட்டுச் சென்றார்.

போலீசார் உதவியுடன் பிடித்து வைத்திருந்த பூஜாகுமாரி மற்றும் அவரது தந்தை என்றழைக்கப்பட்ட ராஜேஸ்குமார் ஜீ ஜெயின் ரன்காவையும் அழைத்துக் கொண்டு, திருச்சி வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெங்களுரில் பணக்கார சேட் ஒருவருக்கு, பூஜாகுமாரியை திருமணம் செய்து வைக்க முயற்சித்தது தெரியவந்தது.

மீண்டும், முசிறி டி.எஸ்.பி.,யிடம் குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பூஜாகுமாரியையும், அவரது தந்தையையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பூஜாகுமாரியின் அழகை பயன்படுத்தி, ஒவ்வொரு ஊராக சென்று, பணக்காரர்களை திருமணம் செய்து, பணம் பறிக்கும் கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமாரை திருமணம் செய்தபோதே, பூஜாகுமாரியின் மொபைல் போனில், வேறு ஒருவருடன் இருக்கும் போட்டோ இருந்துள்ளது. அது, இப்போது போலீஸ் கையில் சிக்கியுள்ளதால், வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் என்ற பெயரில் சிலருடன், சில நாள் குடும்பம் நடத்தி விட்டு, பணம் பறிக்கும் நவீன விபசார கும்பல் பிடிபட்டுள்ளது, துறையூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: