திருமணம் நடந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் இந்திய சட்டப்படி (IPC304B) அது வரதட்சணைக்காக கணவன் செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும். அதற்காக கணவனும் அவனது குடும்பமும் எந்தவித கேள்வியுமின்றி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இது விளையாட்டிற்காக எழுதப்பட்ட செய்தியல்ல. இந்தியக் கணவர்களே திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உங்களது மனைவி இறக்காமல் பார்த்துக்கொண்டேயிருங்கள் (அதாவது வெறிநாய்க் கடித்துவிட்டால் நாய் இறக்காமல் இருக்கிறதா என்று பார்க்கச்சொல்வார்களே அதுபோல - இந்தியாவில் நடக்கும் உங்களது திருமணமும் ஒருவகையில் உங்களுக்கு ஏற்படும் வெறிநாய்க்கடி போன்றதுதான்!). இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து களிதான் திண்ணவேண்டும்.
ஆனால் திருமணமாகி சில நாட்களில் மனைவியின் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டாலும் யாரும் ஏன் என்றுகூட கேட்கமாட்டார்கள். இதுதான் இந்தியாவில் திருமணம் செய்வதால் ஆண்களுக்குக் கிடைக்கும் பலன்.
ஆனால் திருமணமாகி சில நாட்களில் மனைவியின் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டாலும் யாரும் ஏன் என்றுகூட கேட்கமாட்டார்கள். இதுதான் இந்தியாவில் திருமணம் செய்வதால் ஆண்களுக்குக் கிடைக்கும் பலன்.
பெட்ரோல் ஊற்றி கணவர் தற்கொலை
ஏப்ரல் 25,2011 தினமலர்
உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம் தண்டுகுளத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம்(52). சவூதியில் வேலை பார்த்து வந்த இவருக்கு மனைவி சுலைமா பேகம்(48), மகன்கள் சித்திக்(34), ரியாத்(29) உள்ளனர்.
சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அடிக்கடி தகராறு எழுந்தது. மனமுடைந்த அப்துல்ரஹீம் நேற்று காலை 5 மணிக்கு உசிலம்பட்டி கணவாய் அருகில் சேர்வைபட்டி விலக்கிற்கு பஸ்சில் வந்தார். பயணியர் நிழற்குடை அருகே தான் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்தவரின் அருகில், "சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னுடைய பிரேதத்தை மனைவியிடம் கொடுக்க வேண்டாம். நல்ல மனதுடையவர்கள் அடக்கம் செய்யுங்கள். உங்களுக்கு அல்லா மோட்சம் தருவார்,' என, எழுதப்பட்ட கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
No comments:
Post a Comment