பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, January 10, 2010

பதிவுகளைப் படித்தால் "BP" ஏறுமா?


தகனமேடையின் பதிவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பிய ஆர்வலர்களுக்காக இந்தப் பதிவு.......

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர்ல எல்லாப்பெண்களுமா இப்படி பண்றாங்க.எத்தனையோ ஆண்கள் தவறு செய்ற மாதிரி சில பெண்கள்.ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க.நீங்க திருமணம் செய்யாதவரா?

அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்

மதார் said...

//இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடையில் காலடி வைத்தவுடனே உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை.//

உங்க வீட்ல பெண்கள் உண்டா சார் ? உங்க ப்ளாக் படிக்கும் பொழுது மட்டும் எனக்கு BP கூடுது , உங்களுடைய பல பதிவுகள் படிச்சுருக்கேன் இப்போதான் கொஞ்ச நாளா, தொடர்ந்து படிக்கும்போதுதான் நீங்க ஒரேமாதிரி செய்திகளை போடுறது புரிஞ்சது . உங்க கண்ணுக்கு ஆண்கள் பெண்களுக்கு செய்யும் கொடுமைகளும் அதை பற்றிய செய்திகளும் தெரியாதா? இல்ல அந்த செய்தி படிக்கும் போது மட்டும் உங்களுக்கு short time memory ஆய்டுமா? உங்களுடைய செய்திகள் ஒட்டுமொத்த பெண்களுமே தப்பானவர்கள்னு சொல்ற மாதிரி இருக்கு . தப்பான செய்திகள பிறர் அறியச் செய்ங்க , ஆனா ஒருசாரா செயல்படாதீங்க , இது என்னோட வேண்டுகோள் .உங்கள் மனதை என் வார்த்தைகள் புண்படுத்தினால் மன்னிக்கவும் .

=========================================

உங்களுடைய வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

நாட்டிலுள்ள நல்ல பெண்களுக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் தான் நீங்கள் இருவரும் இங்கு உங்களின் கருத்துக்களை எழுதியிருப்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. அதற்காக எனது பாராட்டுக்களும், நன்றிகளும்.

என்னுடைய பதிவுகளில் உள்ள விஷயங்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். ஆண்கள் அனைவரும் நல்லவர்கள், தவறே செய்யாதவர்கள் என்றோ எல்லாப் பெண்களும் தவறு செய்பவர்கள் என்றோ நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

சட்டத்தின் மூலம் வன்முறை செய்துவந்த மனைவிகள் தான் இப்போது கொலை செய்யவும் ஆரம்பித்துவிட்டார்கள் என்று எழுதியிருக்கிறேன். இது சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மனைவிகளுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் இதை "அனைத்து மனைவிகளும் அல்லது பெண்களும் கொலைசெய்வதாக" என்று தவறாக பொருள்படுத்திவிட்டீர்கள். படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிமையாக எழுதத் தெரியாததற்காக நான் வருந்துகிறேன்.

என் வீட்டிலும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாயாரும், சகோதரிகளும் இருக்கிறார்கள். பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்கும் என்வீட்டில் இருக்கும் பெண்களைப்போல நாட்டில் பல நல்ல பெண்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்தப்
பெயரையும் கெடுக்கின்றவகையில் பல பெண்கள் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி பெண்குலத்திற்கே இழிபெயரை தேடித்தந்து கொண்டிருக்கிறார்களே என்ற ஒரு ஆதங்கத்தில் எழுதப்படுவது தான் இந்த பதிவுகள்.

இது போல பல தவறான பெண்கள் இப்படி சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் பிறகு உண்மையாகவே பாதிக்கப்படும் பெண்கள் சட்டத்தின் உதவியை நாடும் போது அவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள். நீங்கள் பள்ளியில் படித்த "புலி வருது" கதையை கொஞ்சம்
ஞாபகப்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் இந்த தவறான சட்டப்பயன்பாட்டிற்கு பின்னால் உள்ள ஆபத்துப் புரியும்.

இதற்கும் இளைஞர்களை திருமணம் செய்வதைப்பற்றி எச்சரிக்கை செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அதிலும்
பெண்களுக்குத்தான் நன்மை இருக்கிறது.

தவறாக சட்டத்தைப் பயன்படுத்தி நல்ல பெண்களின் பெயருக்கு இழுக்கு விளைவிக்கும் பெண்களை கட்டுப்படுத்துமாறு பலர் அரசாங்கத்திடம் முறையிட்டனர். ஆனால் அரசாங்கம் என்ன சொல்கிறதென்றால் இன்னும் நாட்டில் வரதட்சணை கொடுமை இருக்கிறது. அதனால் தவறாக சட்டத்தைப் பயன்படுத்துபவர்களை நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டார்கள்.

வரதட்சணை கொடுப்பதை படித்த பல பெண்களும் இதுவரை விடவில்லை. அவர்கள் செய்யும் குற்றத்தை அரசால் தடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதனால் அரசாங்கத்திற்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கில் வரதட்சணையை ஒழிக்க ஒரு புதுமையானமுறைதான் இந்த பதிவுகள். இத்தனை வருடங்கள் சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் செய்ய இயலாததை இந்தப் பதிவுகள் மூலம் செய்யலாம் என்ற ஒரு சிறு முயற்சி தான்.

இந்த பதிவுகளை படிக்கும் ஆண்கள் என்ன நினைப்பார்கள் என்றால் வரதட்சணை வாங்காமலேயே இப்படி அப்பாவிகள் மீது வரதட்சணை வழக்குப் போடுகிறார்களே நாம் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் என்னவாகுமோ என்ற பயத்திலேயே வரதட்சணை வாங்கும் ஆட்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்பிவிடுவார்கள். பிறகு இந்தியாவிலுள்ள பெண்களுக்கு வரதட்சணை கேட்கும் ஆட்களால் தொல்லையே இருக்காதல்லவா?

நான் இங்கு பெண்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தும் செய்திகளை எழுதவில்லை. ஆண்களுக்குத்தானே எச்சரிக்கை செய்கிறேன். இதில் தவறென்ன இருக்கிறது. நல்ல ஆண்கள் பொய் வழக்குகளிலிருந்து தப்பித்துப் போகட்டும், வரதட்சணை கேட்கும் எண்ணமுடைய ஆண்கள் பார்த்து பயந்து ஓடட்டுமே. இதில் நல்ல பெண்களுக்கு என்ன நஷ்டம் இருக்கிறது?

இப்படி கொஞ்சம் வேறு விதமாகவும் யோசியுங்கள். எல்லா இடத்திலும் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த முறை படிக்கும் போது உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாகப் படியுங்கள் உண்மை விளங்கும். உள்ளே இருக்கும் சுளைகளின் ருசியை உணராமல் பலாப்பழத்திலுள்ள முட்களை
மட்டும் பார்த்துவிட்டு அவசரமாக ஒரு முடிவிற்கு வந்து விடாதீர்கள்.

ஆண்கள் செய்யும் குற்றங்கள் கண்ணுக்கு தெரியாதா? என்று கேட்டிருக்கிறீர்கள். ஆண்கள் செய்யும் அனைத்து குற்றங்களும் முட்டாள்கள் செய்யும் குற்றங்கள் போன்றவை. உலகத்திற்கே தெரியும். இந்த முட்டாள்கள் சிறிய குற்றம் முதல் மிகப்பெரிய குற்றம் வரை செய்வார்கள். ஆனால் ஒருபோதும் சட்டத்தைப்பயன்படுத்தி அந்தக் குற்றங்களை செய்யத்தெரியாது. மாறாக குற்றங்களை செய்துவிட்டு அந்த சட்டங்களில் மாட்டிக்கொள்வார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. அதனால் தான் சாதாரண குடிமகள் முதல் அரசாங்கம் வரை ஆண்கள் என்றால் எப்போதும் குற்றம் செய்பவர்கள் என்ற முத்திரையே குத்திவிட்டார்கள். அதைப்பற்றி நான் எழுதித்தான் அனைவருக்கும் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் தவறான பெண்கள் எப்போதும் புத்திசாலிகள். சட்டம் ஒரு இருட்டறை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்ற இருட்டறைக்குள் இருந்து கொண்டு ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் அப்பாவிகளை தாக்குகிறார்கள். அதனால் பெண்கள் செய்யும் வன்முறைகள் வெளிச்சத்திற்கே வருவதில்லை. அதை இது போன்ற பதிவுகள் ஒரு துளி விளக்கொளியில் காட்டும்போது இதுவரை பெண்கள் தவறே செய்யாதவர்கள் என்று தவறான எண்ணத்தில் ஊறிப்போன உள்ளங்களுக்கு கோபம் வருவது இயற்கையான விஷயம் தான். அதை அவ்வளவு எளிதாக அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. அவர்களின் அப்பாவித்தனமான மனநிலையைக் கண்டு வேதனையாகத்தான் இருக்கிறது.

இதற்குப் பிறகும் உங்களுக்கு என்னுடைய பதிவுகள் "BP" யை ஏற்றினால்
அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அப்படியே உங்களுக்குப் புரியவில்லை என்றால் தாராளமாக விளக்கம் கேட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள். அது தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி.

இப்போது உங்களுக்கு இந்த பதிவின் உட்கருத்துக்கள் நன்றாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா 'Blog' பதிவுகளும் ஏதோ வேலையில்லாமல் பொழுபோக்கிற்காக எழுதப்படுவதாக நினைத்து மேலோட்டமாகப் படித்தால் கடைசியில் ஏமாற்றங்களும் அதன் விளைவாக கோபங்களும், மனக்குழப்பங்களும் தான் மிஞ்சும்.

உங்களைப் போன்றவர்கள் மேலும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் பல நல்லக் கருத்துக்களை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். அதனால் உங்கள் கருத்துக்கள் புண்படுத்திவிடுமோ என்று நீங்கள் வருத்தம் தெரிவிக்கவேண்டாம். நேர்மறையான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் தான் படைப்புகளை மெருகேற்ற உதவும்.

1 comment:

Suresh Ram said...

எனக்கும் சிவகாமிக்கும் திருமணம் முடிந்த 3வது நாளிலேயே மனக்கசப்பு ஏற்பட்டது.

மனைவி பட்டப்படிப்பு படித்திருப்பதாக சொன்னார்கள். அவரிடம் கேட்டபோது பிளஸ்-2 பெயில் என்றார். சான்றிதழை வாங்கிப்பார்த்த போது 4 வயதை குறைத்துச் சொல்லி என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. அன்று முதல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மனைவி மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களின் அறைகளில் தங்கினேன். என்னை கேட்காமலேயே கர்ப்பத்தை கலைத்தாள். இதனால் நான் கடும் வெறுப்படைந்தேன்.

அதன்பிறகு என்னைவிட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். அவளது உறவினர் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்தின் திட்டப்படி என்மீது வரதட்சணை புகார் கொடுத்தாள். துப்பாகியை காட்டி நான் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக புகார் செய்யவே, நான் சஸ்பெண்ட் ஆனேன்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலையில் சேர்ந்தேன். இநி நிலையில் என்னைக் கொலை செய்ய சதி போட்டனர்.

2 முறை என்னை கொல்ல சதி நடந்தது. இரண்டு முறையும் தப்பிவிட்டேன். இப்போது 3வது முறையாக தப்பியிருக்கிறேன். சம்பவத்தன்று நான் ரகசியமாக விடுமுறை எடுத்து கோவிலுக்கு சென்றதால் உயிர் பிழைத்தேன் என்று கூறியுள்ளார்.