பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, May 31, 2010

அரசாங்கம் தூங்கினால் மக்கள் இப்படித்தான் செய்வார்களோ?

இதுவரை பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலங்களைப் பற்றி பலர் பலமுறை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறியும் இதுவரை அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கம் கடமை தவறி தூங்கிக்கொண்டிருந்தால் நாட்டில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று உணர்ந்த ஒரு கணவர் பொய் வரதட்சணை வழக்கிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள தானே நடவடிக்கை எடுத்துவிட்டார். அந்த செய்தியைப் பாருங்கள்.

The Siasat Daily, 30 May 2010

Hyderabad, May 30: In a gruesome incident here, four members of a family were murdered by their son-in-law and his relatives early Sunday, police said.

Six assailants hacked to death four people in a house at Premnagar in Amberpet neighbourhood. Another person sustained serious injuries and is battling for life in hospital, police said.

Qamruddin, his wife Sajida Begum and two other family members Abdullah Begani and Abdullah Kirmani were killed in the attack. Qamruddin's daughter Afreen, wife of the main accused, is in critical condition.

Police said while one person died on the spot, three others succumbed to the their injuries in hospital.

After the murders, Jehangir, son-in-law of Qamruddin, and his brother went to the police station where they surrendered. Police also arrested their four other relatives who helped them in committing the crime.

Jehangir, who separated from his wife following a marital dispute, said he committed the crime to take revenge for a dowry harassment case filed by Afreen against him.

Police are investigating.




இவர் காட்டியிருக்கும் இந்த வழிமுறை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியிருக்கும் பல அப்பாவிகளுக்கு முன்னுதாரணமாக அமைவதற்கு முன் அரசாங்கம் இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். இந்த முன்னுதாரணத்தை தானும் ஏன் பின்பற்றக்கூடாது என்று அனைவரும் எண்ணுவதற்கு பல காரணங்களை இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

மனைவி கணவனுக்கெதிராகவும் அவனது குடும்பத்திற்கெதிராகவும் பொய் வரதட்சணை வழக்குக் தொடுத்தால்:

  • கணவனும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் IPC498A, Dowry Prohibition Act பிரிவுகள் படி எந்தவித ஆதாரமும், விசாரணையும் இன்றி உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மேலும் எத்தனை விதமான IPC பிரிவுகளையும் தயங்காமல் சேர்க்க நம் காவல்துறை நண்பர்கள் கொஞ்சமும் அஞ்சமாட்டார்கள்.
  • அதன்பிறகு காவல் நிலையத்தில் கணவனும் அவனது குடும்பமும் கீழ்த்தரமாக மூன்றாம் தர குற்றவாளி போல அவமானப்படுத்தப்பட்டு ஜாமின் வாங்குவதற்குள் பல அவமானங்களை சந்திக்கவேண்டும்.
  • பிறகு இந்த பொய் வழக்கிலிருந்து வெளிவர பெருமைமிக்க இந்திய நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் அலைய வேண்டும்.
  • இதற்குள் கணவனின் வயதான பெற்றோர்கள் குற்றவாளி என்ற அவப்பெயருடன் தாங்கள் இந்த பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டோம் என் ற நற்செய்தியை கேட்கமுடியாமலே இறைவனடி சேர்ந்து விடுவார்கள்.
  • கணவனின் திருமணமாகாத சகோதரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
  • அப்பாவி இளைஞரின் வாழ்க்கை ஒரு பொய் வழக்கால் சிதைந்துவிடும்.
  • இவை அனைத்தும் குற்றம் செய்யாமலேயே மனைவியின் ஒரு பொய்ப் புகார் மூலம் இந்திய காவல், நீதித் துறைகளும், அரசாங்கமும் சேர்ந்து அப்பாவிகளுக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு.

இவைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கொலை வழக்கு என்பது பொய் சொல்லும் எதிரிகளை அடியோடு ஒழிக்கும் புதிய முறையாக அனைவரையும் சிந்திக்க வைத்து விடும். கொலை வழக்கு வரதட்சணை வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.

  • பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்ய ஆதாரங்கள் தேவையில்லை. ஆனால் கொலை வழக்குப் பதிவு செய்ய தகுந்த ஆதாரங்கள் தேவை.
  • கொலை வழக்கில் வரதட்சணை வழக்கு போல அவ்வளவு எளிதாக வழக்குப் பதிவு செய்து குடும்பத்தோடு எல்லோரையும் கைது செய்ய முடியாது.
  • நூற்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்த அஜ்மல் கசாப் கூட தனியாகத்தான் வழக்கை சந்தித்து தண்டணை அடைந்திருக்கிறான். ஆனால் வரதட்சணை வழக்கில் ஒரு பொய் புகார் மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எளிதாக சிறையில் அடைத்து, அவமானப்படுத்தி துன்புறுத்தலாம்.
  • கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டும்தான் வழக்குகளை சந்திக்க நேரிடும். குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்க்கை எந்தவிதத்திலும் பாழாகாது.
  • அதுமட்டுமல்ல, கொலை செய்த குற்றவாளி என்றால் காவல் நிலையத்தில் கூட அனைவரும் சலாம் அடித்து பயப்படுவார்கள். ஆனால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவரை கீழ்த்தரமாக நடத்தி முடிந்தவரை பணம் பறிக்கத்தான் அனைவரும் முயற்சி செய்வார்கள்.
  • பொய் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாவதை விட, தூங்கும் அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்த்து ஏமாறுவதை விட பொய் வழக்குப் போடுபவரை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று பிறகு என்றாவது ஏதோ ஒரு தலைவருக்கு பிறந்தநாள் என்று விடுதலை செய்துவிடுவார்கள் என்று எண்ண வைத்துவிட்டது இந்த அரசாங்கம்.
அப்பாவியாக பொய் வழக்கில் சிக்கி அவமானப்பட்டு துன்புறுவதை விட கொலை செய்துவிட்டால் போலிஸை கூட அஞ்சி நடுங்க வைக்கலாம் என்ற இந்திய நாட்டு நடைமுறையை சமீபத்திய திரைப்படத்தில் கூட சொல்லிவிட்டார்கள்.


கொலை வழக்கு, பொய் வரதட்சணை வழக்கு என்ற இந்த இரண்டு இந்திய சட்ட நடைமுறைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது அப்பாவிகள் பொய் வழக்குகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த முடிவை எடுப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் தனது கடமையிலிருந்து தவறும்போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தகுந்த வழியைத் தேடிச் செல்வது இயற்கை. இந்த வழிமுறையை காட்டியிருப்பது அரசாங்கம். அதன் வெளிப்பாடு மேலே வந்துள்ள செய்தி. இதற்கு மற்றொரு உதாரணம்தான் நக்ஸலைட், மாவோயிஸ்ட் என்று புதிது புதிதாக வரும் பிரச்சனைகள். அதைப் பற்றி இங்கே படியுங்கள்: வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்களது வாழ்க்கையும் பாழாகி உங்களது ஒழுக்க நெறியும் சீரழிக்கப்பட்டு கடைசியில் கொலைகூட செய்யலாமா என்று யோசிக்க வைத்துவிடுவார்கள் இந்த பாழாய்ப்போன கயவர்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது இந்தியத் திருமணமும் அதனைத் தொடர்ந்து வரும் குடும்ப அழிப்பு சட்ட நடைமுறைகளும், இந்த அநீதிகளை கண்டும் காணாததுபோல் தூங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கமும் ஆகும். அதனால் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.




Sunday, May 30, 2010

கணவரின் ஆன்மா சாந்தியடையட்டும்

தினமலர் 29 மே 2010

தலைவாசல்: தலைவாசல் அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (26). அவரது மனைவி சத்யா (23)வுக்கும் இடையே இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த மனைவி சத்யா, வீட்டு சமையல் அறையில் இருந்த மண்ணெணய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.அதையறிந்த கணவர் ரமேஷ், மனைவியை காப்பாற்ற முயன்றபோது இருவரும் தீக்காயம் அடைந்தனர். தகவலறிந்த உறவினர்கள் ரமேஷ், சத்யாவை படுகாயமடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.படுகாயமடைந்த சத்யா, ரமேஷ் ஆகிய இருவரையும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யாவும், கணவர் ரமேஷ் என அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தலைவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
============================

இந்த குடும்பத்தகராறில் கணவர் உயிருடன் தப்பித்திருந்தால் அவர் மீது IPC304(B) என்ற பிரிவின்படி “வரதட்சணைக் கொலை” என்ற வழக்கு கட்டாயமாக திணிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தாருடன் காவல், நீதிமன்றங்களில் சீரழிந்துகொண்டிருக்க வேண்டும். அந்தக் கொடுமையை விட இவரின் ஆன்மா இப்போது நிம்மதியாக அமைதியடைய வேண்டுவோம்.

இப்படி எழுதியிருப்பது வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. இந்தியாவில் திருமணம் செய்வதை விட மரணமே மேலானது. ஏனென்றால் இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் செய்வதும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாவதும் ஒன்றுதான். கேட்பதற்கு ஆளில்லை. கவலைப்படவும் யாருமில்லை. மனிதாபிமானமும் யாருக்கும் இல்லை. ஆண்களைப் பொறுத்தவரை இந்த நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் இளைஞர்களே இந்தியத் திருமண தீவிரவாதத்திற்கு பலியாகிவிடாதீர்கள்!

IPC Section 304-B "dowry death"

i. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;

ii.
Such death must have occurred within seven years of her marriage;
iii. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;

iv. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;

v. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.


இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் மனைவி இறந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யபடும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கு எதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

In Kans Raj vs. State of Punjab and others AIR 2000 SC 2324 the Hon’ble Supreme Court , inter alia, observed as under:-

“In cases where such accusations are made, the overt acts attributed to persons other than husband are required to be proved beyond reasonable doubt
. By mere conjectures and implications such relations cannot be held guilty for the offence relating to dowry deaths. A tendency has, however, developed for roping in all relations of the in-laws of the deceased wives in the matters of dowry deaths which, if not discouraged, is likely to affect the case of the prosecution even against the real culprits. In their over enthusiasm and anxiety to seek conviction for maximum people, the parents of the deceased have been found to be making efforts for involving other relations which ultimately weaken the case of the prosecution even against the real accused as appears to have happened in the instant case.”


மற்றொரு விசித்திரமான வழக்கம் ஒன்றும் இந்தியாவில் இருக்கிறது. இதை நீங்கள் செய்தித்தாள்களில் பலமுறை பார்த்திருப்பீர்கள். திருமணமான பெண் 7 ஆண்டுகளுக்குள் இறந்தால் உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். ஆனால் இதுவே கணவன் மனைவியால் கொலை செய்யப்பட்டு இறந்தால் கூட எந்த ஒரு விசாரணையும் கிடையாது.

இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் செய்வதும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாவதும் ஒன்றுதான். கேட்பதற்கு ஆளில்லை. கவலைப்படவும் யாருமில்லை. மனிதாபிமானமும் யாருக்கும் இல்லை. ஆண்களைப் பொறுத்தவரை இந்த நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் இளைஞர்களே இந்தியத் திருமண தீவிரவாதத்திற்கு பலியாகிவிடாதீர்கள்!

Friday, May 14, 2010

இந்திய ஆணுக்கு சமூகப் பாதுகாப்பும் இல்லை. சட்டப் பாதுகாப்பும் இல்லை

இந்தியாவில் நடந்திருக்கும் இந்த விசித்திரமான செய்தியைப் பாருங்கள். செய்தியை மேலோட்டமாகப் படிக்காமல் சற்று நிதானமாகப் படித்தால் இந்த செய்திக்குள் இந்தியாவில் பலகாலமாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் ஒரு அவலம் உங்களுக்குப் புலப்படும். நான் இந்த 16, 30 திருமணத்தைப் பற்றிச் சொல்லவில்லை. ஆழ்ந்து படியுங்கள். புரியும்.

ஆந்திரா: 16 வயது மாணவனை மணந்த 30 வயது பெண்
thatstamil.com

கர்னூல்: ஆந்திராவில் 16 வயது மாணவனை 30 வயது பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவனை மீட்டுத் தருமாறு அவரது தாயார் மனித உரிமை ஆணையத்தில் புகார் தந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சைதம்மா என்பவரின் மகன் சித்தய்யா (வயது 16). இவர் ஸ்ரீசைலத்தில் உள்ள ஐ.டி.ஐயில் படித்து வருகிறார்.

இவரது நண்பர் அசோக். சித்தய்யா அடிக்கடி அசோக் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அசோக்கின் சித்தியான சரஸ்வதிக்கும் (வயது 30-பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணமாகாத அந்தப் பெண்ணுக்கும் 16 வயதான சித்தய்யாவக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவும் வைத்துள்ளனர்.

இதையறிந்த அசோக்கின் குடும்பத்தினர் இருவருக்கும் அங்குள்ள கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதையறிந்த சித்தய்யாவின் தாயார் சைதம்மா தனது மகனை மீட்டுத் தரக்கோரி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

என் மகனை ஏமாற்றி திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தால் அவன் படிப்பும், எதிர்காலம் நாசமாகிவிடும். மைனரான என் மகனை கட்டாய தாலி கட்ட வைத்த குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

======================


செய்தியைப் படித்து அந்த அவலத்தைப் புரிந்துகொண்டீர்களா? இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லையென்றால் தொடர்ந்து படியுங்கள்.

மேலுள்ள செய்தியில் மகன் வயதில் இருக்கும் ஒரு சிறுவனை ஒரு பெண் திருமணம் செய்திருக்கிறார். அது மோசடித் திருமணமா என்று தனியாக ஒரு விவாதம் வைத்துக்கொள்ளலாம். அதையும் தாண்டி இந்தியாவில் நடக்கின்ற கேவலமான ஒரு இழிசெயல் ஒன்று இருக்கிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள செய்தியில் நன்றாக கவனித்தீர்களா? சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் மட்டும் மாற்றப்பட்டு அந்தப் பெண்ணிற்கு எந்த இழுக்கும் வந்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் 16 வயது சிறுவனின் பெயர் மற்றும் முழுவிபரம் நன்றாகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட சிறுவர் அல்லது சிறுமியைப் பற்றிய தகவலோ அல்லது புகைப்படமோ கொடுக்கப்படாமல் அந்த சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதுதான் உலகெங்கும் இருக்கும் வழக்கம். ஆனால் இந்த செய்தியில் அந்த சிறுவன் ஒரு “ஆண்” என்ற ஒரே காரணத்தால் அந்தப் பாதுகாப்பு அந்த சிறுவனுக்குக் கொடுக்கப்படவில்லை.

பெண்ணிற்கு வயது 30. அவரைப் பற்றிய விஷயங்கள் வெளியே தெரிந்து அவருக்கு எந்தப்பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று கருதியிருக்கிறார்கள். ஏனென்றால் அவர் “பெண்”. ஆனால் 16 வயது சிறுவனுக்கு அந்தப் பாதுகாப்பைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவன் சிறுவன் என்பதை யாரும் கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவன் ஒரு “ஆண்”. இது மட்டும்தான் இந்த சமூகத்திற்கு தெரியும். இதுதான் இந்திய நடைமுறை.

இது போன்ற நடைமுறை இந்த செய்தியில் மட்டுமல்ல நீங்கள் எப்போது செய்தித்தாளில் இதுபோன்ற செய்திகளைப் படித்தாலும் அதில் பெண்ணின் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுதியிருப்பார்கள். ஆனால் ஆண்களுக்கு இதுபோன்ற பெயர் மாற்றி எழுதிய செய்திகள் மிகவும் அரிது.

இது தான் இன்றைய இந்தியாவில் ஆண்களின் நிலை. சட்டப் பாதுகாப்பும் கிடையாது. சமூகப் பாதுகாப்பும் கிடையாது. இது வயது வித்தியாசம் இல்லாமல் சிறு குழந்தை முதல் வயதான முதியவர் வரை ஆணாக இருந்தால் எல்லா பாதுகாப்புகளும் புறக்கணிக்கப்பட்டுவிடும்.

இளைஞர்களே, இதுதான் இன்றைய இந்தியாவில் உங்களின் நிலை. உங்களைப் பாதுகாக்க சட்டங்களும் இல்லை. சமூகமும் முன்வராது. அரசாங்கமும் முன்வராது. அதனால் இது போன்ற பாலினத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் நாட்டில் உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

உங்கள் சிந்தனையில் பின்வரும் விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்.

  • வரதட்சணை தடுப்புச் சட்டம்
  • மனைவிக் கொடுமை தடுப்புச் சட்டம் (IPC 498A)
  • பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection for Women Against Domestic Violence)
  • மாநில மகளிர் வாரியம்
  • தேசிய மகளிர் வாரியம்
  • பெண்கள் வளர்ச்சி மத்திய அமைச்சகம், இன்னும் பல இருக்கின்றன.

இதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்காக அரசாங்கமும் இந்த சமுதாயம் ஏதாவது செய்திருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். அல்லது ஆண்களுக்கு எந்தவித பாதிப்பும் இந்த சமுதாயத்தில் ஏற்படுவதில்லையா?

இப்படி எல்லாமே ஒருதலைபட்சமாக, சுயநல நோக்குடன் இருக்கும்போது உங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் யார் உங்களைக் காப்பாற்றுவார்கள்? இந்தியாவில் ஆண்களுக்கு சட்டப் பாதுகாப்பும் கிடையாது. சமூகப் பாதுகாப்பும் கிடையாது. அதிலும் குறிப்பாக இந்தியத்திருமணத்தில் சிக்கி சீரழிந்தால் உங்களை எந்தக் கடவுளும் காப்பாற்ற முடியாது.

இந்திய ஆணுக்கு மானம் கிடையாதா? என்று திரைப்படத்தில்கூட கேட்டுவிட்டார்கள்!






Wednesday, May 12, 2010

இந்தியத் திருமணமும் வெறிநாய்க் கடியும்

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்துகொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் பலவிதம். இந்தியாவில் திருமணம் செய்யாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்வது உத்தமம். இந்த நல்லுரையைப் பொருட்படுத்தாமல் இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள நீங்கள் நினைத்தால் நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதற்கு முன்பாக கீழுள்ள செய்தியைப் படித்துக்கொள்ளுங்கள்.


நள்ளிரவில் ஓடும் ரயிலிலிருந்து புதுமணப் பெண் தண்டவாளத்தில் குதித்ததால் திடீர் பரபரப்பு
தினமலர் 12 மே 2010

விழுப்புரம்:காதலருடன் சேர்ந்து வாழ ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற புது மணப் பெண்ணை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் செல்வலட்சுமி(19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியிலுள்ள அவரது உறவினர் சீனி ராஜா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.


அப்போது அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வரும் கணேஷ் என்பவரு டன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வலட்சுமியின் காதல் விவரம் தெரிந்த அவரது பெற்றோர், சென்னை யில் மளிகை கடை நடத்தி வரும் உறவினரான செல்வராஜ் (25) என்பவருக்கு கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். செல்வலட்சுமிக்கு கணவர் செல்வராஜியுடன் சேர்ந்த வாழ விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.


இதனை அறிந்த செல்வராஜ் தங்களது உறவினர்களின் துணையுடன் செல்வலட்சுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து, நேற்றிரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு அழைத்து சென்றனர்.விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது திடீரென செல்வலட்சுமி கதவை திறந்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்தார்.


அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ராஜமோகன், பெண் போலீசார் அம்பிகா ஆகியோர் செல்வலட்சுமியை மீட்டனர். பின்னர் விசாரணை செய்து அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நள்ளிரவில் ஓடும் ரயிலிலிருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

====================

இந்த செய்திக்கும் இந்தியத் திருமணத்தில் உள்ள ஆபத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா மகளின் காதல் விருப்பத்திற்கெதிராக பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர். ஆனால் உண்மையறிந்த அப்பாவிக் கணவர் அந்தப் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்கச் சென்றபோது அந்தப் பெண் பழைய காதலனுடன் சேரவேண்டும் என்பதற்காக ஓடும் இரயிலிலிருந்து குதித்திருக்கிறார். இதில் அவர் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? உடனே அந்த அப்பாவிக் கணவர் மீது வரதட்சணைக் கொலை என்ற சட்டப்பிரிவில் வழக்குப் போட்டிருப்பார்கள். அதற்கான சட்டப்பிரிவு IPC304B.

IPC Section 304-B "dowry death"

i. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;

ii.
Such death must have occurred within seven years of her marriage;
iii. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;

iv. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;

v. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.


இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் சந்தேகப்படும்படியாக மனைவி இறந்திருந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். தங்களது பெண்ணின் காதல் விஷயத்தை மறைத்து திருமணம் செய்ததை மறைப்பதற்காக அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யபடும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கெதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

In Kans Raj vs. State of Punjab and others AIR 2000 SC 2324 the Hon’ble Supreme Court , inter alia, observed as under:-


“In cases where such accusations are made, the overt acts attributed to persons other than husband are required to be proved beyond reasonable doubt
. By mere conjectures and implications such relations cannot be held guilty for the offence relating to dowry deaths. A tendency has, however, developed for roping in all relations of the in-laws of the deceased wives in the matters of dowry deaths which, if not discouraged, is likely to affect the case of the prosecution even against the real culprits. In their over enthusiasm and anxiety to seek conviction for maximum people, the parents of the deceased have been found to be making efforts for involving other relations which ultimately weaken the case of the prosecution even against the real accused as appears to have happened in the instant case.”


மற்றொரு விசித்திரமான வழக்கம் ஒன்றும் இந்தியாவில் இருக்கிறது. இதை நீங்கள் செய்தித்தாள்களில் பலமுறை பார்த்திருப்பீர்கள். திருமணமான பெண் 7 ஆண்டுகளுக்குள் இறந்தால் உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். ஆனால் இதுவே புது மாப்பிள்ளை மனைவியால் கொலைசெய்யப்பட்டு இறந்தால்கூட எந்த ஒரு விசாரணையும் கிடையாது.

வெறிநாய்க் கடித்தால் கடித்த நாய்க்கு ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று கண்காணித்துக்கொண்டு இருக்கச்சொல்வார்கள். அதுபோல இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் 7 ஆண்டுகள் வரை மனைவியை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஏதாவது ஏற்பட்டால் அத்தோடு உங்கள் கதை முடிந்தது. மனைவியின் இறப்பிற்கு வேறு காரணங்கள் இருந்தாலும் உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்துவிடுவார்கள் நம்ம ஊர் கடமைவீரர்கள். பிறகு நீங்கள் நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற அபாயமான இந்தியத்திருமணம் சுகமானதா அல்லது ஆபத்தானதா என்று யோசியுங்கள்.

சமீபத்திய செய்தி என்ன சொல்கிறதென்றால் இந்த சட்டத்தை திருமணமாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகும் மனைவி இறந்தால் கணவன் தான் காரணம் என்று சட்டத்தை திருத்தலாமா என்று உச்சநீதிமன்றம் யோசிப்பதாக செய்தி சொல்கிறது. அதனால் இந்தியாவில் திருமணம் செய்தால் ஆயுள் முழுக்க உங்களுக்கு ஆபத்து இந்திய மனைவி என்ற உருவில் கூடவே இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளுங்கள்.

Notably, Section 304 B is applicable only if the married woman dies unnatural death within seven years of her marriage and perhaps in this context, the Supreme Court wants the law to be amended to remove the limitation of seven years so that the culprits do not get away with their crime without being adequately punished.
- http://www.indlawnews.com/NewsDisplay.a ... 887c232236

நான் வரதட்சணை வாங்காமல்தான் திருமணம் செய்வேன். எனக்கு எப்படி இதுபோல நடக்கும் என்று பல சிந்தனைகள் உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். நம்ம ஊரில் சட்டமும், சட்டத்தை செயல்படுத்துபவர்களும் நேர்மையாக இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் நினைப்பது போல உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நீங்கள் நினைப்பது சரி. இல்லையென்றால் பொய்வழக்குகள் எப்படி இருக்கும் என்று நீங்கள் அனுபவிக்க நேரிடும்.

தீவிரவாதி கசாப்பிற்கு தீர்ப்பு வழங்கவே இரண்டு ஆண்டுகள் 33 கோடி செலவு செய்து கடைசியில் அவன் தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட்டதாக நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால் அப்பாவியாக நீங்கள் பொய் வழக்கில் சிக்கினால் நீங்கள் நிரபராதி என்று நிரூபித்து வருவதற்குள் அதே 33 கோடி செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாட்டு நடப்பு இப்போது எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியுமல்லவா! அதனால் இந்த அபாயகரமான சூழலில் உங்களது திருமணத்தை நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்.





Saturday, May 8, 2010

தமிழகத்தில் பரவும் காதல் வைரஸ்!

முன்பெல்லாம் காதல் திரைப்படங்களுக்கு இடையே தேசபக்தியை ஏற்படுத்தும் விதமாக பல விடுதலைப்போராட்ட வீரர்களைப் பற்றிய திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அதற்கு நடுவே மக்களை நல்வழிப்படுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் போற்றும் பக்திப்படங்களும் வந்துகொண்டிருந்தன.

அதன்பிறகு 21ம் நூற்றாண்டிற்கு பெருமையுடன் நுழைகிறோம் என்று ரௌடிகளையும், குண்டர்களையும், கொலைகாரர்களையும் கதாநாயகனாக சித்தரித்து திரைப்படம் எடுக்கும் சிறுமைத்தனமான செயல்களில் ஈடுபட்டுவந்தார்கள். இப்போது கள்ளக்காதல்தான் மார்க்கெட்டில் நன்கு பணம் கொட்டும் தொழிலாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் “கலை” என்ற பெயரில் ஒரு சாயத்தைப் பூசிவிட்டார்கள். அரசாங்கமும் இதுபோன்ற படங்களுக்குத்தான் விருது கொடுத்து சிறப்பிக்கிறது. கீழுள்ள செய்தியில் பாருங்கள் கள்ளக்காதலுக்காக ஒரு திரைப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.


================
கள்ளக்காதல் கதை
Web Dunia செவ்வாய், 9 மார்ச் 2010

யுவா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கும் படம் இலக்கணப் பிழை. ஒரு ஆட்டோ ஓட்டும் இளைஞன் பற்றிய கதை இது. வரம்பு மீறினால் வாழ்க்கை என்னாகும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் என்கிறார் இப்பட இயக்குனர் ஜோ.

தன் நண்பன் மனைவியிடம் ஏற்படும் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பல
பிரச்சனையால் தற்கொலைக்கே செல்லும் ஹீரோ, பிறகு எப்படி திருந்துகிறான் என்பதை விரசம் இல்லாமல் சொல்லும் படம் இலக்கணப் பிழை.
================


அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியில்தான் செல்வார்கள். தவறான சமுதாயம் தவறான அரசனைத்தான் ஆதரிக்கும். தவறான சட்டங்கள் தவறுசெய்பவர்களைத்தான் ஊக்குவிக்கும். ஒட்டுமொத்தத்தில் எல்லாம் நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் பொய் வரதட்சணை வழக்குகள். அரசாங்கம் காட்டும் வரதட்சணைப்புகார் புள்ளி விவரக்கணக்கில் 99% புகார்கள் வரதட்சணைக் கொடுமைக்காக கொடுக்கப்படுவதில்லை. மனைவியின் கள்ளக்காதல், மனைவியின் பணத்தாசை, ‘தான்’ என்னும் அகம்பாவம், அடுத்தவருக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத கீழ்மைத்தனம், கணவனை அடக்கி ஆளவேண்டும் என்ற ராட்சச குணம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற காரணங்களால்தான் வரதட்சணைப் புகார்கள் கொடுக்கப்படுகின்றன. இது தான் இந்தியாவின் தற்போதைய கலாச்சாரப் போக்கு. ஆனால் அதையும் தாண்டி கள்ளக்காதலுக்காக கொலை செய்யும் மனப்பான்மை தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாக அரசாங்கப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கீழுள்ள தினமணி செய்தியைப் பாருங்கள்.


================

8 மே 2010

தனிநபர் வருமானத்திலும், கல்வியிலும், சுகாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு என்னதான் முன்னிலை வகித்தாலும் ஒழுக்கக் குறைவான சம்பவங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்றால் நாம் எப்படி தலைகுனியாமல் இருக்க முடியும்.

2007 முதல், காதல் விவகாரத்தால் நடைபெறும் கொலைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான் அது. 2007-ல் 123 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2009-ல் 217 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஓராண்டில் மட்டும் 1,600 கொலைகள் நடந்துள்ளன. குடும்பச் சண்டைகளால் 453 கொலைகளும், அற்பச் சண்டைகளால் 372 கொலைகளும் நடந்துள்ளன. 2007-ல் 1,521 ஆக இருந்த கொலைகளின் எண்ணிக்கை 2009-ல் 1,644 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மிகவும் கவலை தரத்தக்கது எதுவென்றால் காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருவதுதான். இந்தக் கொலைகள் அதிகரித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால், தமிழக முதல்வர் பாணியில் காதல்தான் காரணம் என்று கூறிவிடலாம். இந்தக் காதலில் முறையான முதல் காதல், ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், கள்ளக் காதல் என்று வகைகள் பல இருக்கலாம். களவியல் என்பது தமிழருக்குப் புதியதல்லவே என்று இலக்கிய நயத்தோடு இதை புறந்தள்ளிவிட நினைக்கலாம். தமிழர்களின் தனிச்சிறப்பே காதலும் வீரமும்தான் என்பதை ஒப்புக் கொண்டாலும், தமிழனுக்கு மானமும் முக்கியம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.


================


இளைஞர்களே,

மேலுள்ள செய்தி உங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. உங்கள் திருமணத்தைப் பற்றிய முடிவு செய்யும்போது நன்கு ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். முன்பெல்லாம் இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்லும் அபாயம் மட்டும்தான் இருந்தது. இப்போது உயிரே போகும் அபாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.

வேறு நாடுகளில் நடக்கும் திருமணங்களில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால் விவாகரத்து செய்துகொள்வார்கள். ஆனால், இந்தியாவில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால் கணவன் விரும்பிக்கேட்டாலும் விவாகரத்து கொடுக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக கணவன் மீது பொய்யான குற்றவழக்குகள் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்கள்தான் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act.

இதற்கு நல்ல உதாரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மாலிக்கின் கதை. அவரிடம் விவாகரத்து (திருமணம் நடந்ததா இல்லையோ என்பதே இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது) வாங்கவேண்டும் என்பதற்காக அவர் மீது போடப்பட்ட வழக்குகள் IPC498A, 506, 420. இந்த சட்டப்பிரிவுகளுக்கும் விவாகரத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள். விவாகரத்தில் அவர் கையெழுத்திட்டவுடன் ஒரே நாளில் இந்த வழக்குகள் மாயமாகிவிட்டன!

அதனால் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் நீங்கள் விவாகரத்துக் கேட்டாலோ அல்லது உங்கள் மனைவிக்கு விவாகரத்து தேவைப்பட்டாலோ வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்தி
உங்கள் மீது பொய் வழக்குகள் போடப்படும். இது அரசாங்க ஆதரவோடு அமோகமாக நடைபெற்றுவருகிறது. இதுதான் தற்போதைய இந்தியத் திருமணச் சட்ட நடைமுறை. இந்த பொய் வழக்குகளை நம்பித்தான் பல காவல் மற்றும் நீதித்துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற கொடிய பழக்கத்தை வேறெந்த நாட்டிலும் காணமுடியாது. இந்த நடைமுறையுடன் இப்போது கள்ளக்காதல் என்ற புதிய கலாச்சாரமும் வளர்ந்து வருகிறது. இதற்குத் தடையாக யார்வந்தாலும் கொலை செய்துவிடும் புதிய பழக்கமும் இப்போது நடைமுறையில் வளர்ந்து வருகிறது. இதைத்தான் மேற்கண்ட செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் நல்லது.




Monday, May 3, 2010

தீவிரவாதிகளை ஒடுக்க ஒரே வழி


செய்தித்தாள்களில் தினமும் தீவிரவாதங்களைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உலகம் முழுதும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நக்ஸல்களை ஒடுக்க முடியாமல் அரசாங்கம் மிகவும் கவலையுடன் இருக்கிறது.

##########
நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை: ப.சிதம்பரம் கவலை
தினமணி 2 மே 2010

கோவை, மே 1: நக்ஸல்களின் சவாலால் இந்தியாவுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நடைபெற்ற 6 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கோவை போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு சான்றிதழை வழங்கி சிதம்பரம் பேசியது:

6 மாநிலங்களில் இருக்கும் நக்ஸல்களின் சவால்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த சவால்களையும் முறியடிப்போம். அச்சுறுத்தல்களுக்கு இடம் கொடுக்காமல், மன உறுதியுடன் செயல்படுவது அவசியம் என்றார்.
##########

அரசாங்கம் பல முயற்சிகள் செய்து தீவிரவாதிகளை ஒடுக்கப் பல திட்டங்கள் போட்டாலும் கீழுள்ள செய்தியில் உள்ளது போல பல மறைமுக ஆதரவுகள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு இடையூராக இருந்துகொண்டிருக்கிறது. இந்தப்பிரச்சனைகளையெல்லாம் சமாளித்து தீவிரவாதத்தினை ஒடுக்க ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. இது மிகவும் எளிமையானது, சர்வதேச தீவிரவாதத்தையும் ஒழிக்கக்கூடியது. அது என்ன என்று தெரிந்துகொள்ள செய்தியைத் தொடர்ந்து படியுங்கள்.

#############

லக்னோ : உ.பி.,யில், நக்சல்கள் என சந்தேகப்படும் நபர்களுக்கு, ஆயுதங்கள் வழங்கிய, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் இரண்டு பேர், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், காவல் துறையினர் இரண்டு பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

############

அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து தீவிரவாதிகளையும் பிடித்து அரசாங்க செலவில் இந்தியாவில் இருக்கும் சட்டதீவிரவாதிகளுடன் திருமணம் செய்து வைத்துவிட்டால் போதும். இந்த வன்முறை செய்யும் தீவிரவாதிகள் சட்டதீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பொய் வரதட்சணை வழக்குகளில் (IPC498A, Domestic Violence Act) மாட்டிக்கொள்வார்கள். பிறகு அவர்களை அந்தக் கடவுள் கூட காப்பாற்ற முடியாது.

பொய்வழக்குப்போடும் மனைவி, பொய்வழக்கை சரியாக விசாரிக்காமல் கடமை தவறி பணிபுரியும் காவல் துறை, ஏதோ கடனே என்று செயல்படும் நீதித்துறை இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல இருக்கும் அரசாங்கம் இந்தக் கூட்டணியின் மூலம் உருவாகும் பொய்வழக்கில் சிக்கினால் யார்தான் தப்பமுடியும்? பிறகு தீவிரவாதிகளின் கதி என்னவாகும் என்று யோசித்துப்பாருங்கள். ஆயுசு முழுக்க சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் பொய்வழக்கில் சிக்கி அலைந்து கொண்டிருக்கவேண்டியதுதான். பிறகு உலகில் தீவிரவாதி என்று சொல்வதற்குக் கூட ஒரு ஆளும் இருக்கமாட்டான்.

ஒரு தீவிரவாதியை தீவிரவாதி என்று சொல்லி கைது செய்யத் தகுந்த ஆதாரங்கள் வேண்டும். ஆனால் அதே தீவிரவாதியை “இந்தியக் கணவன்” என்ற நிலைக்கு மாற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு வரதட்சணை வழக்கைப் போட்டு சிறைக்குள் தள்ளிவிடுவது மிகவும் எளிது. ஏனென்றால் வரதட்சணை வழக்கிற்கு இந்திய சட்டப்படி ஆதாரங்கள் தேவையில்லை. இந்தியக் கணவனாக இருந்தால் அதுவே போதும்.

பெண் தீவிரவாதியாக இருந்தால் “இந்தியக் கணவராக்கப்பட்ட” ஆண் தீவிரவாதியின் உறவினர் என்று சொல்லி IPC498A சட்டத்தின் மூலம் கைது செய்துவிடலாம்!

தீவிரவாதத்தை ஒடுக்க எவ்வளவு எளிதான வழி! இது தெரிந்தும் ஏன் உள்துறை அமைச்சகம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இந்த யோசனையை எல்லா நாடுகளும் பின்பற்றலாம்.

கத்தியின்றி, ரத்தமின்றி, இந்திய (வரதட்சணை) சட்டப்படி சர்வதேச அளவில் தீவிரவாதத்தினை ஒழிக்கும் எளிய முறை!




Sunday, May 2, 2010

வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்


இந்தியாவில் அகிம்சை வழியில் செல்ல நினைக்கும் அப்பாவிகள் கொலையும் செய்யும் அளவிற்கு கொடிய கோழைகளாக எப்படி சுயநலஅரசியல் கோமாளிகளால் மாற்றப்படுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கீழுள்ள செய்திகளை கவனமாகப் படியுங்கள்.

சில காலமாக நக்ஸல் தாக்குதல் பற்றி செய்திகள் வந்தவாறு இருக்கின்றன. அதன் பின்னனியிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நக்ஸல் பிரச்சனையின் காரணம் என்ன என்பதல்ல இந்தப்பதிவின் நோக்கம். அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் தினமணி வெளியிட்டிருக்கும் தலையங்கச் செய்தியைப் படியுங்கள். அந்தச் செய்தியை இந்தப் பதிவின் கடைசி பாகத்தில் பார்க்கலாம்.

இனி சுயநல அரசியல் கோமாளிகள் எப்படி தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் என்று செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் ஆராய்ந்துபார்ப்போம்.

* * * * * * * * * * * * * * * * * *

  • நக்ஸல்களின் வன்முறையின் மூலம் முதல் பேரழிவு தாக்குதல் ஏற்பட்டபோது அரசாங்கம் அமைதிப்பேச்சிற்கு அழைத்திருக்கிறது. மாநில அரசுகள் முதல் மத்திய அரசாங்கம் வரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சியிருக்கின்றன. அதைப்பற்றிய செய்தியை கீழே பாருங்கள்.

வன்முறையை கைவிட்டால் நக்ஸலைட்டுகளுடன் பேசத் தயார்: சிதம்பரம்
வெப்துனியா புதன், 21 அக்டோபர் 2009

ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக நக்ஸலைட்டுகள் அறிவித்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மக்களவை முன்னாள் அவைத் தலைவர் ரபி ரே உள்ளிட்ட பலர் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான துணை இராணுவப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று விடுத்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சர் சிதம்பரம், ரபி ரே தலைமை வகிக்கும் அமைதிக்கான குடிமக்கள் முன்முயற்சி (
Citizen’s Initiative for Peace) அமைப்பு மாவோயிஸ்ட்டுகளுடன் பேசி, அவர்கள் மேற்கொண்டு வரும் ஆயுதப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

“மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டமே அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தடையாக உள்ளது. அவர்களை ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துகின்றனர். வன்முறைப் பாதையை கைவிடுவதாக அவர்கள் அறி்க்கை வெளியிட்டால் அவர்களோடு மத்திய மாநில அரசுகள் அவர்கள் எழுப்பும் பிரச்சனைகள் எதுவாயினும் அது குறித்துப் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம
்” என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

* * * * * * * * * * * * * * * * * *

  • பேச்சுவார்த்தைக்கு வராமல் தொடர்ந்து நக்ஸல்கள் 76 வீரர்களை தாக்கிக்கொன்றபோது சமாதானத்திற்கு அழைத்த அரசாங்கம் அவர்களை காட்டில் ஒளிந்து தாக்கும் கோழைகள் என்று தனது இயலாமையை வெளிப்படுத்தி வெறுப்பைக் கொட்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலகில் எதைப்பற்றிவேண்டுமானாலும் பேசலாம் ஆனால் வன்முறையை மட்டும் விட்டுவிடுங்கள் என்று மன்றாடியிருக்கிறது. அதைப்பற்றிய செய்தியைக் கீழே பாருங்கள்.

வெப்துனியா ஞாயிறு, 4 ஏப்ரல் 2010
லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் ஒளிந்து கொள்ளவேண்டும். அவர்கள் உண்மையில் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் நம்பிக்கை வைத்திருந்தால் பேச்சு வார்த்தைகளுக்கு சம்மதிக்கவேண்டும்.
உலகில் எதை வேண்டுமானாலும் பேசலாம் வாருங்கள் ஆனால் வன்முறையைக் கைவிட்டு விடுங்கள். என்று அழைப்பு விடுத்துள்ளார் ப.சிதம்பரம்.

* * * * * * * * * * * * * * * * * *


  • கடைசியில் இப்போது நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை என்று என்ன செய்வதென்று வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்த அரசாங்கம். அதைப்பற்றிய செய்தியையும் கீழே படியுங்கள்.

நக்ஸல்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை: ப.சிதம்பரம் கவலை
தினமணி 2 மே 2010

கோவை, மே 1: நக்ஸல்களின் சவாலால் இந்தியாவுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நடைபெற்ற 6 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கோவை போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு சான்றிதழை வழங்கி சிதம்பரம் பேசியது:

6 மாநிலங்களில் இருக்கும் நக்ஸல்களின் சவால்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது.

* * * * * * * * * * * * * * * * * *
* * * * * * * * * * * * * * * * * *

மேற்கண்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்போது தங்களது குறிக்கோளை (அது சரியானதா அல்லது தவறானதா என்பதைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு செய்யவேண்டாம்) அடைய வன்முறையில் ஈடுபட்டவர்களை பலமுறை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சி அழைத்திருக்கிறது இந்த அரசாங்கம். அவர்கள் அதற்கு ஒத்துவராதபோது அவர்களை கோழைகள் என்று நிந்தனையும் செய்திருக்கிறது. கடைசியில் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறது.

அதனால் அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் நேர்மையாக அகிம்சைவழியில் தங்களின் நியாயமான கோரிக்கைக்குப் போராடுபவர்கள் “வீரர்கள்”. வன்முறையில் இறங்கி மறைந்திருந்து தாக்கி தங்களது கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள நினைப்பவர்கள் “கோழைகள்”.

இந்தக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பல ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான அப்பாவிப் பெண்களும், ஆண்களும் பொய் வரதட்சணை வழக்குகளால் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டும்
பல இன்னல்களுக்கு ஆளாகியும், அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பொய் வழக்குகளால் பல இளைஞர்களும், இளம் சகோதரிகளும் தங்களது வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள், இன்னும் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவையனைத்தும் தவறாக இயற்றப்பட்டுள்ள இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்களால் (IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act) இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடுமை. நக்ஸல்கள் என்பவர்கள் ஏதோ சில மாநிலங்களில் மட்டும்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த பொய் வரதட்சணை வழக்குகளால் காவல் மற்றும் நீதித்துறைகளால் கொடுமைப்படுத்தப்படுபவர்கள் இமயம் முதல் குமரி வரை, இந்திய எல்லையைக் கடந்து அயல்நாடுகளிலும் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் எந்த ஒரு வன்முறையும் செய்யாமல் அகிம்சை வழியில் போராடி அரசாங்கத்திற்கு மனுக்களை எழுதி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து காப்பாற்றுமாறு முறையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


கீழே பாருங்கள் எத்தனை அமைப்புகள் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கெதிராக அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

-->
-->
இந்த உண்மை ஜனாதிபதி, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அரசாங்கம் என அனைவருக்கும் தெரியும். அகிம்சை வழியில் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கும் இந்த அப்பாவிகளை பாதுகாக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. ஆனால் இவர்களுக்குப்பெயர் அகிம்சை வழியில் போராடும் “வீரர்கள்”.

இவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சகம் என்ன செய்திருக்கிறதென்றால் ஒரே ஒரு சுற்றறிகையை மாநில அரசுகளுக்கு அனுப்பி தங்களால் ஏதும் செய்ய இயலாது அதனால் மாநில அரசுகள் விரும்பினால் ஏதாவது செய்து இந்த அப்பாவிகளை காப்பாற்றட்டும் என்று கையை விரித்துவிட்டது. ஏனென்றால் இந்த அப்பாவிகள் அனைவரும் வன்முறையில் ஈடுபடாமல், காடுகளில் மறைந்திருந்து “கோழைகள்” போல தாக்குதல் நடத்தாமல் அகிம்சை வழியில் போராடும் “வீரர்கள்”. அதனால் இவர்களின் கோரிக்கைகளை செவிகொடுத்துக்கேட்கவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ அரசாங்கத்திற்கு அவசியமில்லை. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து இவர்களின் குறைகளைக் கேட்க இவர்கள் என்ன காட்டில் மறைந்திருந்து தாக்கும் கோழைத்தனமான தீவிரவாதிகளா?

அந்த சுற்றறிக்கையைப் பாருங்கள்.






அரசாங்கத்தின் இந்தப்போக்கு தவறான வழிமுறையைத்தான் மக்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. வன்முறையில் இறங்கும் “கோழைகளாக” இருந்தால் அரசாங்கம் காலில் விழாத குறையாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். ஆனால் அப்பாவியாக அகிம்சை வழியில் நியாயமான கோரிக்கைக்குப் போராடினால் அவர்களை “வீரர்கள்” என்று சொல்லி வேடிக்கை மட்டும்தான் பார்க்கும் என்ற தவறான மனப்பான்மை அனைவருக்கும் ஏற்படுமல்லவா?

தீவிரவாதம் என்பது ஒரு இனமல்ல. தீவிரவாதிகள் என்று யாரும் பிறப்பதுமில்லை. அகிம்சை வழிசெல்லும் வீரர்கள் அரசியல் சுயநலக்கோமாளிகளால் தீவிராவாதி என்னும் கோழைகளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அரசாங்கம் இந்த அப்பாவிகளைக் காப்பாற்ற தவறான வரதட்சணை சட்டத்தில் தகுந்த திருத்தங்கள் கொண்டுவந்தாலே போதும். பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்து தலையை சொறிந்துகொண்டிருக்கும் குழப்பமான நிலையெல்லாம் அரசாங்கத்திற்கு இல்லையே.

இளைஞர்களே,

இதுபோன்றதொரு தவறான சூழ்நிலையில் சுயநக்கோமாளிகளால் கோழைகளாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள். இந்தியாவில் திருமணம் செய்து உங்களது வாழ்க்கையை சூன்யமாக்கிகொள்வதைவிட வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.

==================================================================



தினமணி தலையங்கம்
தெரிந்தே செய்யும் தவறு
9 ஏப்ரல் 2010


மாநில போலீஸார் மற்றும் மத்திய சிறப்புக் காவல் படையினர் உள்ளிட்ட 76 பேர் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாடு தழுவிய அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது.​ தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருக்கும் காஷ்மீரில்கூட பாதுகாப்புப் படையினர் இந்த அளவுக்கு மோசமான தாக்குதலை எதிர்கொண்டதில்லை.

எந்த ஓர் அரசும் இதுபோன்ற வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.​ இதுபோன்ற தாக்குதல் இந்திய இறையாண்மைக்கும் மக்களாட்சித் தத்துவத்துக்கும் விடப்பட்ட சவால் என்று கருதுவதிலும் தவறில்லை.​ அரசின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத அரசின் ஆளுமைக்கு உள்படாத ஒரு பகுதி இருப்பதை எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாலும் ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ முடியாது.​ ​

தீவிரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்வதற்கு உதவும் காரணிகளையும் சூழலையும் களையாமல் துப்பாக்கியைத் துப்பாக்கியால் மட்டுமே எதிர்கொண்டு வெற்றியடைவது சாத்தியமா என்பது சந்தேகம்தான்.​ வீரவசனம் சினிமாவில் பேசிக் கைதட்டல் பெறுவதுபோல,​​ நிர்வாகத்தில் சாத்தியப்பட்டதாகச் சரித்திரம் உணர்த்தவில்லை.​ ​ மேற்கு வங்கம்,​​ ஒரிசா,​​ இப்போது சத்தீஸ்கர் என்று மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகள் பரந்து விரிந்துகொண்டே போவதை கடந்த மூன்று ஆண்டுகளாகவே நமது தலையங்கத்தில் எச்சரித்து வருகிறோம்.​ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருபது விழுக்காடாக இருந்து இப்போது ஏறத்தாழ இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி மாவோயிஸ்டுகளின் கையில் சிக்கியிருப்பதை வேதனையோடு குறிப்பிட்டே தீர வேண்டும். மாவோயிஸ்டுகள் இந்தியாவின் 16 மாநிலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள்.​

இந்தியாவில் உள்ள 460 மாவட்டங்களில் ஏறத்தாழ 175 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.​ காஷ்மீர்,​​ அசாம்,​​ வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் பிரிவினைவாதம் சார்ந்த தீவிரவாதம் இதில் சேராது. மாவோயிஸ்டுகளின் முழு ஆளுமையில் இருக்கும் மாவட்டங்கள் 58.​ மாவோயிஸ்டுகள் ஓரளவுக்குப் பலமாக இருக்கும்,​​ ஆனால்,​​ இந்திய அரசின் ஆளுமை தொடரும் மாவட்டங்கள் 54.​ ஏனைய 83 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் இருக்கிறது.​ கடந்த ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான காவல்துறையினர் ​(312 பேர்)​ பலியான மாவோயிஸ்டுகளைவிட ​(294 பேர்)​ அதிகம். இந்த அளவுக்கு மாவோயிஸ்டுகள் பலம் பெற்றதற்கு என்ன காரணம்?​ இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​

இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள். ​ 1995 வரை இவர்கள் நிம்மதியாகக் காட்டை நம்பி வாழ்ந்து வந்தனர்.​ நமது வனத்துறை அதிகாரிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தனர்.​ இந்த வனப்பகுதியில் இந்திய அரசின் அதிகாரமும் ஆளுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.​

உலகமயமாக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்த வனப்பகுதியில் குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தாதுப் பொருள்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கிடைக்கப் போகும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அந்த நிறுவனங்களை இங்கே காட்டை அழித்துச் சுரங்கங்களை நிறுவ ஊக்குவித்தது.​ ​ கட்சி வேறுபாடின்றி எல்லா அரசியல் கட்சிகளும் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்தபோது ஆதிவாசிகள் மிரண்டனர்.​

தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் அவர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியது.​ பட்டணத்துத் தெருக்களில் கூலிகளாகவும்,​​ ரிக்ஷாக்காரர்களாகவும் அல்லாட அவர்கள் தயாராக இல்லை.​ அவர்களை வெளியேற்றி இந்தியாவின் கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​ தங்களுக்காகக் குரல் கொடுக்கவும் ஆதரவுக்கரம் நீட்டவும் எந்த அரசியல் கட்சியும் சமூக அமைப்பும் இல்லாத நிலையில் பேய்க்குப் பயந்து பூதத்துக்கு வாழ்க்கைப்பட்ட கதையாக அவர்கள் மாவோயிஸ்டுகளைத் தஞ்சமடைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.​ இதுதான் மாவோயிஸ்டு அசுர வளர்ச்சியின் பின்னணி. தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து பன்னாட்டு கனிம நிறுவனங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை வெற்றி பெறும் என்பதுதான் உண்மைநிலை.​ ஆனால் அரசோ,​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும்சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறது.​ இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியோ என்றுகூட நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இந்தியாவின் மையப்பகுதியில் ஓர் எரிமலை கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.​ அது வெடிப்பதும் வெடிக்காமல் போவதும் அரசின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான் இருக்கிறது.​

நிதியமைச்சராக இருக்கும்போது ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நமது மத்திய உள்துறை அமைச்சர் தலையங்கத்துக்குக் கீழே தரப்பட்டிருக்கும் குறளைப் படித்து அதன்படிச் செயல்பட்டாலொழிய இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று நாம் நம்பவில்லை.​ ​

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து,​​ நோயின் காரணம் ஆராய்ந்து,​​ அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,​​ உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும். திருக்குறள் ​(எண்:​ 948) அதிகாரம்:​ மருந்து