வீடியோவில் வந்த காட்சிகளும் நடைமுறையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களும் எவ்வளவு உண்மை என்று செய்தித்தாளில் வந்துள்ள செய்திகளையும் பாருங்கள்.
தினமலர் செய்தி டிசம்பர் 24,2008
சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார்.
எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பணம் வசூலித்த டி.எஸ்.பி.,உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட்
நகரி:வரதட்சணை வழக்கில் இருவீட்டாரையும் சமரசம் செய்து வைப்பதாக கூறி, பணம் வசூலித்த டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்.ஐ., இரு போலீசார் உட்பட, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சென்னையைச் சேர்ந்த பத்ரிநாத்துக்கும், சித்தூர் மாவட்டம் புங்கனூர் மசூதித் தெருவைச் சேர்ந்த குருவப்பாவின் மகள் அருணாவிற்கும், 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த வழக்கில், பத்ரிநாத்திடம் இருந்து போலீசார் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள, அருணா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வழக்கு விசாரணையையும் புங்கனூர் போலீசார் துரிதப்படுத்தவில்லை. பத்ரிநாத்திடம் வாங்கிய பணத்தை, போலீசார் அருணாவிடமும் கொடுக்கவில்லை. பத்ரிநாத்திடமும் திருப்பி தரவில்லை.இந்நிலையில், அருணா, பத்ரிநாத் ஆகிய இரு குடும்பத்தினரும், சித்தூர் மாவட்ட எஸ்.பி., லட்சுமிரெட்டியை நேரில் சந்தித்து, நடந்த விவரங்களை கூறினர்.அதன் பேரில், பலமநேர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள், பத்மாகரரெட்டி,சீனிவாசுலு, எஸ்.ஐ., ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் நாராயணமூர்த்தி, நாகராஜ் ஆகிய ஆறு பேர் மீது விசாரணை நடந்தது. விசாரணையின் அறிக்கைப்படி, மாநில டி.ஜி.பி., கிரிஸ்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும், சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விஷயம் இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு காமெடியான விஷயம். அவ்வளவுதான். அதன் பின்னால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையை உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் சொல்லியிருக்கிறது. அதனைக் கண்டுகொள்வார் யாரும் இல்லை.
கீழுள்ள தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பாருங்கள். 2003ம் ஆண்டில் இந்த அவலநிலையைப் பற்றி சொல்லியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த பொய் வழக்கு அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இளைஞர்களே, நீங்களாவது தப்பித்துக்கொள்ளுங்கள். அதற்கான ஒரே வழி வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான். சிந்தியுங்கள்.
Versus Ramesh Chand and Ors. …………Respondents Through Mr. R P Bhardwaj, Adv.
HON’BLE MR. JUSTICE J.D. KAPOOR
23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sistes, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.
24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.