நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் அரசாங்கத்தின் உதவியுடன் நடக்கும் சட்டதீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி உதவி கிடைக்காமல் சீரழிந்து போவீர்கள். உங்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இது உறுதியான உண்மை. அதனால் வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களின் உயிருக்கும் நல்லது. உங்களின் குடும்ப மானத்திற்கும் நல்லது.அப்பாவிகள் பொய் வழக்குகளில் பலியாவது அரசாங்கத்திற்கு தெரிந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவிடாமல் பெண்கள் சங்கங்கள் தங்களை தடுப்பதாக பாசாங்கு காட்டி கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள இந்த சுற்றறிக்கையைப் பாருங்கள்.
(கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்)
புதுடில்லி;ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் ஒரு மணமான ஆண் தற்கொலை செய்கிறார். விவசாயிகள் தற்கொலை, மகாராஷ்டிராவில் குறைந்தாலும் இதர மாநிலங்களில் அதிகரித்துள்ளது.இதெல்லாம் என்ன தெரியுமா...? இந்தியாவில் தற்கொலை குறித்துமேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள்.தேசிய குற்றச்செயல்கள் ஆவண மையம் (என்.சி.ஆர்.பி.,) 2008ம் ஆண்டுக்கான தற்கொலை ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது:கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 17 பேர். இது 2007ஐ விட 1.9 சதவீதம் குறைவு.இவர்களில் மணமான ஆண்கள் மட்டும் 57 ஆயிரத்து 639 பேர். அதாவது, ஒவ்வொரு ஒன்பது நிமிடத்துக்கும் ஒருவர் வீதம் தற்கொலை செய்கிறார்.பெண்கள் 30 ஆயிரத்து 224 பேர் 2008ல் மட்டும் தற்கொலை செய்துள்ளனர்.விவசாயிகளின் தற்கொலை, மொத்தம் 16 ஆயிரத்து 196 பேர்.விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கும் மகாராஷ்டிராவில் மட்டும் 3,802 பேர். இது 2007ஐ விட குறைவு.ஆந்திரா, சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் இவற்றில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.ஏழை மாநிலங்களான பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் இவற்றை விட, பணக்கார மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகாவில் தற்கொலை அதிகரித்துள்ளது.தற்கொலையில் ஆண்: பெண் விகிதாசாரம் 64:36 என்ற வீதத்தில் இருந்தாலும், சிறுவர்: சிறுமியர் (14 வயது வரை) விகிதம் 49:51 என்ற வீதத்தில் இருக்கிறது.
இந்தியாவில் மேற்கு வங்கம் - 11.9 சதவீதம், மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா - 11.5 சதவீதம், கர்நாடகா - 9.8 சதவீதம், கேரளா - 6.9 சதவீதம், ம.பி -6.1 சதவீதம், குஜராத் -4.9 சதவீதம், ராஜஸ்தான் - 4.1 சதவீதம் என்ற விகிதத்தில் தற்கொலைகள் நடந்துள்ளன.கடந்த 1998லிருந்து பார்க்கும் போது 2008ல் 19.4 சதவீதம் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. தற்கொலைக்கான காரணங்களில் குடும்பப் பிரச்னையே முதலிடத்தில் (23.8 சதவீதம்) உள்ளது. உடல்நலப் பிரச்னையால் 21.9 சதவீதம் பேரும் தற்கொலை செய் கின்றனர். இவர்களுக்கு அடுத்துதான் காதல், கடன், பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம், வரதட்சணைப் பிரச்னை, வறுமை இவற்றால் தற்கொலை செய்பவர்கள் இடம் பெறுகின்றனர்.இந்தியாவின் 35 பெருநகரங்களில் 2004லிருந்து 2007 வரை தற்கொலைகள் அதிகரித்துள்ளன. 2008ல் சற்று குறைந்துள்ளது. குறிப் பாக பெங்களூரு, சென் னை, மும்பை மற்றும் டில்லி ஆகிய நான்கு நகரங்களில்தான் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.இவ்வாறு அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
====================================
It’s not just women who go through trauma as a result of bad marriages. Men suffer just as much, but silently. Recent data made public by the National Crime Record Bureau (NCRB) points out that one married man in India is committing suicide every nine minutes. According to the survey, the cause may vary from personal problems and marital issues to economic pressures. It’s clear that many men are agonising internally over failed marriages.
Psychologist Sridevi S says it’s because men are not as expressive as women and bottle their feelings. “Women have been nurtured from the time they are young into believing that they can surmount problems. But on the other hand men are told not to cry and express emotions in public, so they suppress all their troubles until it overwhelms them and they feel they can’t take it any more.” She continues, “The sudden increase in suicidal tendencies among men is also because earlier women took care of all the family issues, but today, both husband and wife are working, they deal with it together. So men find it difficult to balance home as well as work.” The survey points out that compared to women, men are a greater suicide risk, with a male-female ratio of 64:36.
Suresh Ram, Convener, Save Indian Family movement, TN, says that this could be the result of pro-women Indian laws. “There are several laws in our country which protect women, while men have no such protection. Often women take advantage of it. There is this stereotype attached to men, that they should not cry or express their depression. Why is it,” he questions, “that when a man commits suicide he is called coward, while when a woman does so, they say she is driven to it-” he asks. Actor Srikanth says,“Being a married man could be a little stressful today, but you must understand that there is a woman in your life who is also going through the same.”
http://www.deccanchronicle.com/tabloids/married-men-more-prone-suicide-study-634
இந்த செய்தியோடு சேர்த்து பின்வரும் செய்தியையும் சேர்த்துப் படியுங்கள் சாதாரண மனிதன் முதல் பெருந்தலைவர் வரை அனைவருக்கும் இந்த நிலைதான் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களுக்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் சுற்றியிருக்கும் கூட்டம் எப்படி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கொல்கிறார்கள் என்று தெரியும்.
தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..!
நன்றி: உண்மைத்தமிழன் வலைத்தளம்
ராயப்பேட்டை மார்ச்சுவரியில் தோழரின் உடலைப் பார்த்தவுடன் தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று தோழரின் உடன் பிறந்த சகோதரிகளும், மனைவியும் ஆளுக்கொரு பக்கமாகப் போர்க்கொடி தூக்கியதில் இருந்தே அத்தோழரின் குடும்பத்துப் பிரச்சினை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பது புரிகிறது.
கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது இந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த அளவுக்கு வேலைவெட்டியில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது நிச்சயம் குடும்பத் தகராறுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது பொதுவில் வந்திருக்க வேண்டியதில்லை. புகார் கொடுத்தவர் கட்சியைச் சேர்ந்த அவருடைய மனைவியாகவே இருந்தாலும் அதனை குடும்பப் பிரச்சினையாகக் கருதி நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்திருந்தால் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் எழவுக்கான செலவு ஏற்பட்டுத் தொலைந்திருக்காது. அவர்களுக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் நிற்க ஒரு மக்கள் தொண்டரும் கிடைத்திருப்பார்.
கட்சியில் பல மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்புதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பல பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துக் கொண்டிருந்த கட்சியின் பெண்ணியவாதிகள், தோழரின் உடல் மீட்கப்பட்டவுடன் அப்படியே அமைதியானார்கள். கட்சித் தலைவர்கள் கட்சியின் நியாயத்தை சொல்வதை நிறுத்திவிட்டு தோழரின் அருமை, பெருமைகளை பறை சாற்றத் துவங்கிவிட்டார்கள். தனது கணவரான தோழர் வரதராசன் மீது கட்சியில் புகார் மனு அளித்திருந்த அவரின் துணைவியாரே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்தான் தோழர் வரதராசன் இந்த முடிவுக்குச் சென்றதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.